நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மீண்டும் பாகிஸ்தான் அணியை வீழ்த்துவோம் என அமெரிக்க வீரர் முகமத் மொஹ்சின் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் முதல் சுற்றில் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இந்த முறையும் தங்களால் அதைச் செய்ய முடியும் என அந்த அணி வீரர் தெரிவித்திருக்கிறார்.
இரட்டை பாசிட்டிவ் இருக்கிறது
மேலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசியது. ஒரு கட்டத்தில் இந்திய அணியை அமெரிக்க அணி வீழ்த்தி விடும் என்கின்ற அளவுக்கு போட்டியின் நிலை இருந்தது. இது அவர்களுடைய தன்னம்பிக்கையை மிகவும் அதிகரிக்க செய்திருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க வீரர் முகமத் மொஹ்சின் பேசும்போது “இந்திய அணிக்கு எதிராக விளையாடியது குறித்தும் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். நாங்கள் அவர்களை ஏற்கனவே ஒரு முறை வீழ்த்தி இருக்கிறோம். எனவே அழுத்தம் முழுக்க அவர்கள் மீது தான் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் இழப்பதற்கு எதுவும் கிடையாது. எங்களுடைய பயணத்தை அனுபவித்து செய்கிறோம். எனவே இன்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இன்னும் சிறப்பானதாக மாற்றுவோம்”
நாங்கள் திறமையானவர்கள்
“கடந்த டி20 உலகக் கோப்பையில் இருந்த எங்கள் அணி திறமையானது. தற்போதுள்ள எங்கள் அணி இன்னும் திறமையானது. எங்கள் திறமையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு நல்ல ஆட்டத்தை நடத்தி நாங்கள் வெற்றி பெறுவோம்”
இதையும் படிங்க : இந்தியாவுடன் ஆட சம்மதித்த பாகிஸ்தான்.. தப்பித்த பங்களாதேஷ் – இடையில் நடந்தது என்ன?
“கடந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் அவர்கள் வென்றதை குறித்தது பேசி எங்களுடைய நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு விவாதித்தோம். அதே சமயத்தில் நாங்கள் கடந்த முறையை விட இன்னும் நம்பிக்கையாக இருக்கிறோம். நாங்கள் இன்று பாகிஸ்தான் அணியை வென்று சிறப்பாக போட்டியை முடிப்போம்” என்று கூறி இருக்கிறார்.






