நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் எந்த வீரர்கள் அதிக ரன் மற்றும் விக்கெட் எடுப்பார்கள் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் வெயின் பர்னல் கணிப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகின்ற காரணத்தினால், இந்திய அணியும் இந்திய அணி வீரர்களும் சாதிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலராலும் கணிக்கப்பட்டு வருகிறது.
அதிக ரன் அதிக விக்கெட்
தற்போது நடைபெற்றுக் கொண்டு வரும் டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா அதிக விக்கெட் கைப்பற்றுவார், அபிஷேக் ஷர்மா அதிக ரன் குவிப்பார் என பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக பர்னல் தெரிவித்திருக்கிறார்.
அவர் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிக ரன்கள் எடுப்பார் எனவும், அதே சமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அதிக விக்கெட் கைப்பற்றுவார் என்றும் கூறியிருக்கிறார்.
இவர்கள் பைனல் வருவார்கள்
மேலும் அவர் தொடரை நடத்தும் இந்திய அணி முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று கூறி இருக்கிறார். இரண்டாவது அணியாக அவர் தென் ஆப்பிரிக்க அணியை தேர்வு செய்திருக்கிறார். இதற்கு அடுத்த இரண்டு அணிகளாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை தேர்வு செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : 2016 நடந்ததை நேபாள் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது.. நேத்து எங்க ட்ரெஸ்ஸிங் ரூம் மோசமாகி இருக்கும் – சாம் கரன் பேட்டி
இதற்கு அடுத்து இந்த டி20 உலக கோப்பை தொடரில் கடந்த முறையைப் போலவே இந்திய அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இன்று தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியில் கனடா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.






