டி20 உலக கோப்பை இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்.. சூரியகுமார் வருத்தம்.. மாற்று வீரர் யார் வர வாய்ப்பு?

0
7
Harshit

டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக முக்கிய வீரர் ஒருவர் விலகி இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

நாளை துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் மும்பையில் வைத்து அமெரிக்க அணியை சந்திக்கிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி என்பது இந்திய வீரர் ஒருவர் காயமடைந்து தொடரை விட்டும் வெளியேறி விட்டார் என்று செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

வெளியேறியது யார்?

நேற்று முன்தினம் இந்திய அணி டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் மும்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா நடக்க முடியாமல் கொஞ்சம் சிரமப்பட்டார். மேற்கொண்டு அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்துவீசி 16 ரன்கள் விட்டுத் தந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது காயத்தின் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்று செய்திகள் கூறுகிறது. மேலும் இதுகுறித்து பேசி உள்ள இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஹர்ஷித்ராணா விளையாடாமல் போனால் தங்கள் திட்டங்களுக்கு பெரிய அடி விழும் என்றும் தாங்கள் அவரை தவற விடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மாற்று வீரர் யார்?

இந்த நிலையில் ஹர்ஷித் ராணா இடத்திற்கு நட்சத்திர மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இருந்த முகமது சிராஜ் ஹர்ஷித் ராணா வருகையால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2026 டி20 உகோ.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் காட்டும் சூதானம்.. யுஎஸ்ஏ வேற மாதிரி விளையாட்டு

கடந்த டி20 உலக கோப்பை தொடரின் போது முகமது சிராஜ் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவருக்கு இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -