240 ரன்.. பயிற்சி போட்டியில் தெறிக்க விட்ட இஷான் கிஷான்.. சஞ்சுவுக்கு கல்தா.. திலக் கலக்கல் கம்பேக்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி

0
4
Ishan

இன்று டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் நவி மும்பையில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரையும் போட்டிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இஷான் கிஷான் அதிரடி

இதைத் தொடர்ந்து இன்று துவக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான் மற்றும் அபிஷேக் சர்மா வந்தார்கள். சஞ்சு சாம்சனை இந்திய அணி நிர்வாகம் கலட்டி விட்டது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 20 பந்துகளில் 53 ரன்கள், அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தோம் அடுத்த வீரர்கள் விளையாட வழி விட்டு வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து திலக் வர்மா 19 பந்துகளில் 45 ரன்கள், சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள், அக்சர் படேல் 23 பந்தில் 35 ரன்கள், ரிங்கு சிங் 13 பந்தில் 16 ரன்கள், ஹர்திக் பாண்டியா 10 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணி வெற்றி

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் 19 பந்தில் 38 ரன், ரியான் ரிக்கல்ட்டன் 21 பந்தில் 44 ரன்கள், ஸ்மித் 23 பந்தில் 35 ரன்கள், மார்க்கோ யான்சேன் 16 பந்தில் 31 ரன்கள், ஸ்டப்ஸ் 21 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : 310 ரன்.. U19 உலக கோப்பை பைனலில் இந்தியா.. சூரியவன்சி ஜார்ஜ் அசத்தல்.. ஆப்கான் பரிதாப தோல்வி

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -