t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த டி20 உலக கோப்பையில் பங்கு பெறுகிற ஸ்காட்லாந்து அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
வங்கதேச அணி சில பிரச்சனைகளின் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக ஐசிசி ஸ்காட்லாந்து அணியை டி20 உலக கோப்பைக்குள் சேர்த்தது. மொத்தமாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் ஸ்காட்லாந்து அணி மற்ற அணிகளை விடவும் வலுவாக இல்லாமல் இருந்தாலும் அந்த அணியிடமும் குறிப்பிடத்தக்க பேட்டிங் வரிசை மற்றும் ஓரளவு நல்ல பந்துவீச்சு இருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஸ்காட்லாந்து வீரர் பிராண்டன் மெக்முல்லனை தான் தீவிரமாக கவனிக்கப் போவதாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஸ்காட்லாந்து அணி ஒரு நல்ல டி20 அணி என்று நான் நினைக்கிறேன் அவர்களிடம் நல்ல ஒரு பந்துவீச்சு உள்ளது. ஆனால் அவர்களது பவுலிங் வகை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குதே தவிர விக்கெட்டுகள் வீழ்த்தக் கூடிய வகை அல்ல. ஆனால் அவர்களிடம் நல்ல தரமான பேட்டிங் வீரர்கள் இருக்கிறார்கள். ரிச் பாரிங்டன் இருக்கிறார். மேத்யூ கிராஸ் நிச்சயமாக ஒரு வலுவான இலக்கை அடைய உதவிகரமாக இருப்பார்.
மைக்கேல் ஜான் நிச்சயம் ஒரு வலுவாக சிறப்பாக விளையாடும் வீரர். பிராண்டன் மெக்முல்லன் கடந்த உலகக் கோப்பையில் விளையாடினார். ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் அடித்திருக்கிறார். அப்போதிருந்தே அவர் கவனிக்கத்தக்க வீரராக மாறிவிட்டார். எனவே இந்த தொடரில் அவர் எவ்வாறு சிறப்பாக செயல்பட போகிறார் என்பதை கண்டிப்பாக கவனிக்க போகிறேன்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.






