எல்லாமே சாம்சன் கையில்தான் இருக்கு.. நாங்க இதுதான் செய்ய முடியும்.. இனிமே பேச வேண்டாம் – இந்திய பேட்டிங் கோச் பேட்டி

0
6
Sanju

தற்போது இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிசான்சு கோடக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கும் முதல் நான்கு போட்டிகளில் சஞ்சு சாம்சன் பெரிய ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. மேலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

மீண்டும் மீண்டும் குழப்பம்

தற்போது இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து விளையாட போவது யார் என்கின்ற குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முன்பாக சுப்மன் கில் தொடக்க வீரராக இருந்து அவரை மாற்ற வேண்டும் என பெரிய அழுத்தங்கள் வெளியில் இருந்து உருவானது. இதற்குப் பிறகு சஞ்சு சாம்சனை கொண்டு வந்தார்கள்.

தற்போது சஞ்சு சாம்சன் பார்ம் மிக மோசமாக இருக்கிறது. எனவே இஷான் கிஷானை கொண்டு வர வேண்டும் என பேச்சு ஆரம்பித்திருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இன்னும் ஒரே ஒரு டி20 போட்டிதான் எஞ்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவர் கையில்தான் இருக்கிறது

இதுகுறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் ஒரு சீனியர் வீரர்; மிகவும் திறமையான வீரர். எல்லோரும் எதிர்பார்க்கும் அளவுக்கு அவரிடம் இருந்து ரன்கள் வராமல் இருக்கலாம். ஆனால் இது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஒருவருக்கு ஐந்து போட்டிகள் தொடர்ந்து ரன்கள் வரும். சில நேரம் வராமலும் போகும். இது நடக்கக் கூடியதுதான்”

இதையும் படிங்க : கம்பீருக்கு அடுத்த சில மாதங்கள் நல்லபடியா இருக்காது.. பெரிய பிரச்சனை காத்திருக்கு – டெம்பா பவுமா பேச்சு

“ஒரு வீரர் மனதை எவ்வளவு வலுவாக வைத்துக் கொள்கிறார் என்பது அந்த வீரரின் கையில்தான் இருக்கிறது. அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பது எங்களது வேலையும் கூட. சஞ்சு தொடர்ந்து பயிற்சி செய்கிறார்; கடுமையாக உழைக்கிறார். அவர் எவ்வளவு திறமையானவர் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். எனவே அவர் குறித்து அதிகம் பேச வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -