ஹர்ஷித் ராணாவை மோசமா பேசிட்டோம்.. அந்த பையன் பண்ண டெம்ப்ளேட் வேற மாதிரி இருக்கு – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

0
24
Harshit

தற்போது ஹர்ஷித் ராணா சிறந்த முறையில் மேம்பட்டு வரும் வீரராக இருக்கிறார் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டி இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்ஷித் ராணா பேட்டிங் பங்களிப்பில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை வென்றது. இதற்கு அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் அரை சதம் அடிக்க இந்திய அணி வெற்றியை நெருங்கி தோல்வி அடைந்தது.

- Advertisement -

பையன் நிரூபித்து விட்டான்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” நீ என்னுடைய மீமை கடினப்பட்டு உருவாக்கினாய். நான் கடினப்பட்டு உழைத்து என்னுடைய கனவை உருவாக்கினேன். இதற்கு சரியான உதாரணமாக ஹர்ஷித் ராணா இருந்து வருகிறார். நான் அந்தப் பையனுக்காக வீடியோவை செய்தேன். அதிக முறை தவறாக விமர்சிக்கப்பட்டிருக்கிறான் என்று கூறியிருக்கிறேன்”

“இங்கு யாரும் கண்களையும் காதுகளையும் மூடி கொண்டிருக்கவில்லை. தங்களைப் பற்றி சுற்றிலும் எந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லாம் நமக்கு தெரிகிறது. ஒரு வீரனால் என்ன செய்ய முடியும் கையில் பந்து இருந்தால் வீசுவான்; பேட் இருந்தால் விளையாடுவான். ஹர்ஷித் ராணா அதைத்தான் செய்தார். அவர் தற்போது உண்மையில் முன்னேறி விட்ட வீரராக இருக்கிறார்”

- Advertisement -

வெற்றிக்கு காரணமே அவர்தான்

” உண்மையில் அவர் தன்னுடைய இடத்தை எல்லா வகையிலும் கிடைத்த வாய்ப்பில் உறுதி செய்திருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 29 ரன்கள் இல்லை என்றால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும். கடைசி போட்டியில் அவருடைய அரை சதம் இருந்திருக்காவிட்டால் நாம் 70 ரன் வித்தியாசத்தில் தோற்று இருப்போம்”

இதையும் படிங்க : கம்பீர் இந்த 2 விஷயத்தை செய்யணும்.. இல்லனா உலக கோப்பை கிடைக்காது.. தோக்க காரணம் இதுதான் – ரகானே அறிவுரை

“அவர் உண்மையில் அபாரமான விளையாட்டு வெளிப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார். அவர் தற்போது மிகவும் மேம்பட்ட வீரராக மாறிவிட்டார். அவர் ஆரம்பத்தில் எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது, தற்பொழுது விமர்சனத்தை குறைத்து விட்டார் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -