இந்திய அணி தோத்துடிச்சு தான்.. ஆனா இதுக்காக கம்பீரை பாராட்டியே ஆகணும்.. தைரியமான முடிவு – சடகோபன் ரமேஷ் கருத்து

0
19
Gambhir

நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்து இருந்தாலும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் செய்த ஒரு வேலைக்கு அவரைப் பாராட்ட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறியிருக்கிறார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் விராட் கோலி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் சேர்ந்து அதிரடியாக 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள். இன்னும் மூன்று ஓவர்கள் ஹர்ஷித் ராணா ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று இருந்தால் இந்திய அணி போட்டியை வென்று இருக்கலாம். சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் அடித்தார்.

- Advertisement -

கம்பீர் உறுதியான முடிவு

தற்போது இந்திய கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் போன்று பந்து வீசும் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் இல்லை. இப்படியானவர்களை உருவாக்கும் பொழுது கீழ் வரிசை பேட்டிங் பலமாக இருக்கும். மேலும் இவர்கள் முழுமையான பந்துவீச்சாளர்கள் என்பதால் பவுலிங் யூனிட்டும் பலமானதாக இருக்கும்.

இதன் காரணமாக பல விமர்சனங்களுக்கு மத்தியில் கம்பீர் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர் வாய்ப்புகளை இந்திய அணிகளில் கொடுத்து வந்தார். குறிப்பாக தற்போது மூன்று வடிவ இந்திய அணிகளிலும் இடம்பெறக்கூடிய சில வீரர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் குறித்த விமர்சனங்கள் வந்த பொழுது கம்பீர் நேரடியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்காக பாராட்ட வேண்டும்

இதுகுறித்து பேசி உள்ள சடகோபன் ரமேஷ் கூறும் பொழுது “நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தவுடன், அவருடன் இணைந்து ஹர்ஷித் ராணா விளையாடும்போது, இந்திய பேட்டிங் யூனிட் இன்னும் வலிமையானதாக இருக்கும். நாம் ஹர்ஷித் ராணாவுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அவர் மீது கம்பீர் நம்பிக்கை வைத்தார். அவரையும் பாராட்ட வேண்டும். அவர் கொடுத்த ஆதரவில்தான் ஹர்ஷித் ராணா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்”

இதையும் படிங்க : விராட் கோலிக்கு வேதனையாக இருக்கும்னு எனக்கு தெரியும்.. பொறுப்பா இருக்க வேண்டிய அவர் அதை செய்யல – ஜாகிர் கான் வருத்தம்

“ஹர்ஷித் ராணா பேட்டிங் செய்யும் இடம் மிகவும் கடினமானது. அவர் பெயருக்கு கீழே இருக்கக்கூடிய யாரும் நல்ல முறையில் பேட்டிங் செய்யக் கூடியவர்கள் கிடையாது. அவர் கடைசி நிறுத்தம் போன்றவர். எனவே அழுத்தத்தின் கீழ் விளையாடுவதற்கு அவருக்கு நாம் பாராட்டுகள் கொடுக்க வேண்டும். மேலும் பெரிய அணிகளுக்கு எதிராக அவர் செயல்படுவதற்கான ஆற்றலை பெற்றிருக்கிறார். அது சீக்கிரத்தில் வெளிப்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -