சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணி சிறப்பான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தேர்வுக் குழுவை இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி இருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அதிரடியாக துணை கேப்டன் கில் நீக்கப்பட்டார். மேலும் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷான் இருவரும் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த முடிவுகளை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
நான் அதிர்ச்சி ஆயிட்டேன்
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். கில்லை நீக்குவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அவரைத் துணை கேப்டன் ஆக்கி கடைசியாக ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க தொடரிலும் வைத்திருந்தார்கள். ரிங்கு சிங் ஏற்கனவே அணியில் இருந்திருந்தாலும் கூட இஷான் ரேடாரில் இல்லாமல் இருந்தார். இது ஒரு அருமையான தேர்வு. இதற்காக அகர்கர் மற்றும் தேர்வுக் குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”
” கில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்தவர். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரன்கள் குவித்தார். அதே சமயத்தில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் அவர் தாக்கம் கொடுக்க கூடியவராக இல்லை. இஷான் கிஷான் உடன் வைத்து பார்க்கும் பொழுது ஸ்ட்ரைக் ரேட்டில் பின் தங்குகிறார். இந்த இடத்தில்தான் சஞ்சு மற்றும் அபிஷேக் இருவரும் முன்னேறுகிறார்கள். சஞ்சு மற்றும் இஷான் இருவரும் துவக்க இடத்தில் விக்கெட் கீப்பர்களாக வருகிறார்கள்”
உள்நாட்டு கிரிக்கெட்டையும் பார்க்கிறார்கள்
“இஷான் அருமையான தேர்வு. அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன் குவித்தார். அதாவது தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் குவிப்பதை பரிசீலனை செய்கிறார்கள். அவர் அடித்த ஸ்கோர்கள் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்”
இதையும் படிங்க : நான் கம்பேக் கொடுத்தா என்ன செய்வேனு என் வீரர்களுக்கு தெரியும்.. 14 பேர்தான் காப்பாத்துறாங்க – சூரியகுமார் யாதவ் பேட்டி
“அவர் தனக்காக ரன்கள் அடிப்பது மட்டும் இல்லாமல் அதன் மூலமாக அணியையும் வெல்ல வைத்து கோப்பையையும் உள்நாட்டு கிரிக்கெட்டில் வென்றார். நீங்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இரட்டை சதம் இந்திய அணிக்கு அடித்திருக்கிறார். பிறகு அவர் அணியில் இருந்து காணாமல் போனார்” என்று கூறியிருக்கிறார்.






