சூர்யகுமார் நீங்க இதை மட்டும் சரி பண்ணுங்க.. டி20 உலககோப்பைக்கு முன் ரொம்ப முக்கியம்- வருண் ஆரோன் கருத்து

0
313

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வருண் அரோன் குறிப்பிட்டுள்ளார். அவரது பேட்டில் ரன்கள் வந்தால்இந்திய கேப்டனின் நம்பிக்கை,
பெரிதும் உயரும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதி போட்டி, டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் சூர்யகுமார் 29 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 9.67 என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது.

- Advertisement -

நம்பிக்கை வரும்:

இது குறித்து பேசிய வருண் ஆரோன், “சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடிப்பதில்தான் கவனம் செலுத்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு உண்மையிலேயே ரன்கள் தேவை. சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடித்தால், நம்பிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.”

“ஏனெனில் நீண்ட காலமாக அவரது பேட்டில் ரன்கள் வரவில்லை. ஷுப்மன் கில்லின் நிலையும் அதேதான். டி20 உலகக் கோப்பை பற்றி பேசும்போது இந்த இருவரும் நமது அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள், அவர்கள் ரன்கள் அடித்தால் இந்திய அணி முற்றிலும் தோல்வியுறாத அணியாக இருக்கும்”

- Advertisement -

ஒரு இன்னிங்ஸ் தூரம்:

“சூர்யகுமார் யாதவ் முற்றிலும் ஃபார்முக்கு வெளியே இல்லை. சையது முஷ்தாக் அலி டிராபியில் அவரது சராசரி 41, ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. அவர் ஒரு இன்னிங்ஸ்  ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என்று நினைக்கிறேன். கேப்டனாக 83 சதவீத வெற்றி விகிதம் இருந்தால், நீங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்து வருகிறீர்கள் என்பது தெரியும்.”

“குறிப்பாக இரண்டு முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு. இந்திய கிரிக்கெட்டின் தூண்களான வீரர்கள் டி20 அணியில் இல்லாத நிலையில் இத்தகைய முடிவுகளை அடைந்துள்ளீர்கள். இது உங்களுக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு இருப்பதையும், வீரர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதையும் காட்டுகிறது. ஆம், சூர்யகுமார் யாதவ் நாம் விரும்பும் அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் சரியான நேரத்தில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்” என்று வருண் ஆரோன் கூறினார்.

இதையும் படிங்க: ஜோஸ் இங்லீஷை விட மாட்டோம்.. பிசிசிஐ கிட்ட புகார் கொடுப்போம்.. பஞ்சாப் கிங்ஸ் எடுக்கும் முக்கிய முடிவு – வெளியான தகவல்கள்

சூர்யகுமார் யாதவ் 92 டி20 இன்னிங்ஸ்களில் 2,783 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 35.67. கேப்டனாக 34 டி20 இன்னிங்ஸ்களில் 743 ரன்கள், சராசரி 23.96 ஆகும்.
என்றார். சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் முடிந்த 2025-26 சையது முஷ்தாக் அலி டிராபியில் மும்பைக்காக விளையாடிய ஐந்து இன்னிங்ஸ்களில் 165 ரன்கள் எடுத்தார், சராசரி 41.25, ஸ்ட்ரைக் ரேட் 139.83. ஆகும்.

- Advertisement -