பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் ஆஸ்திரேலிய டி20 தொடர் பிக்பேஷ் லீக்கின் அறிமுகம் மிகவும் பரிதாபகரமாக அமைந்திருக்கிறது.
இந்த வருடம் பிக்பேஷ் லீக் தொடரில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ஷாகின் அப்ரிடி இருவரும் முதல்முறையாக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இவர்கள் இருவருக்குமே அறிமுக போட்டி மிகவும் பரிதாபமாக அமைந்திருக்கிறது.
பந்து வீச்சுக்கு தடை
இந்த தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஷாகின் அப்ரிடி அறிமுகமானார். இதில் தனது முதல் ஓவரில் ஒன்பது ரன்கள் அவர் விட்டுக் கொடுத்ததும் ஸ்பெல் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் வந்த அவர் தன்னுடைய இரண்டாவது ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார்.
இந்த நிலையில் போட்டியின் 18 வது ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை பேட்ஸ்மேனுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இடுப்புக்கு உயரமாக ஃபுல் டாஸ் ஆக பீமர் பந்து வீசினார். இந்த இரண்டு பந்துகளுமே பேட்ஸ்மேன் நோக்கி இருந்த காரணத்தினால், கிரிக்கெட் விதியின்படி மேற்கொண்டு அவர் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
பாபர் அசாமும் சோகம்
இந்த போட்டியில் ஷாகின் அப்ரிடி மொத்தம் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் தொடர்ந்து அவர் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவருடைய அறிமுக போட்டியே சோகமாக அமைந்தது. மேலும் இதனால் அவருடைய அணியும் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : இந்திய அணியின் வில்லனுக்கு நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது.. மகளிர் பிரிவில் செபாலிக்கும் ஐசிசி விருது
மேலும் இதே தொடரில் முதல்முறையாக பாபர் அசாமும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக களம் இறங்கினார். முதல் போட்டியில் நான்கு பந்துகளை சந்தித்த அவர் மிகவும் தடுமாறி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இரண்டு பாகிஸ்தான் நட்சத்திர வீரர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் அறிமுகமே சோகமாக அமைந்திருக்கிறது.






