தற்போது கம்பீர் தலைமையிலான இந்திய அணியின் சிந்தனை குழு பேட்டிங் ஆர்டரில் பெரிய தவறுகள் செய்து கொண்டிருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்டியிருக்கிறார்.
நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 213 ரன்களை துரத்தியது. மிகப்பெரிய இலக்கை துரத்தும் பொழுது சம்பந்தமே இல்லாமல் மூன்றாவது இடத்திற்கு அக்சர் படேலை அனுப்பி வைத்தார்கள். ரன்கள் எடுக்க வேண்டிய பவர் பிளேவில் அவர் 21 பந்துகள் விளையாடி 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
சீரியஸாக சொல்கிறேன்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்பொழுது “நீங்கள் பேட்டிங் ஆர்டரை சரி செய்யுங்கள். நான் இதை உங்களுக்கு சீரியஸ் ஆகவே சொல்கிறேன். நீங்கள் 213 என்று பெரிய இலக்கை நோக்கி துரத்திக் கொண்டிருந்தீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் சம்பந்தமே இல்லாமல் அக்சர் படேலை மூன்றாவது இடத்தில் அனுப்பினீர்கள். நீங்கள் முதல் ஆறு ஓவர்களில் 60 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இப்படி செய்வீர்களா?”
“நீங்கள் எட்டு வரையில் பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் பொழுது எதற்காக அவரை மூன்றாவது இடத்தில் அனுப்ப வேண்டும். உங்களுக்கு வலதுகை இடதுகை பேட்டிங் காம்பினேஷன் அந்த இடத்தில் தேவைப்படவும் இல்லை. ஏற்கனவே அங்கு இடதுகை வீரர் அபிஷேக் சர்மாதான் இருந்தார். அந்த இடத்தில் விக்கெட் விழ ஆரம்பித்தது. இதனால் அவர் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டார்”
அவருக்கு 21 இவருக்கு 13
” பவுலிங் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மொத்தம் 21 பந்துகள் விளையாடினார். மேலும் அவர் 21 ரன்கள்தான் எடுத்தார். ஆனால் சிவம் துபே பேட்டிங் செய்ய வந்த பொழுது 13 பந்துகள்தான் இருந்தது. அப்போது அவர் வந்தாலும் வராவிட்டாலும் எந்த பயனும் கிடையாது. இது சரியான வழி இல்லை”
இதையும் படிங்க : சூரியகுமாருக்கு பேட்டிங் வர பயம்.. உண்மையே இதுதான்.. இல்லனா அந்த முடிவை எடுத்திருக்க மாட்டாங்க – முகமது கைஃப் விமர்சனம்
” பெரிய இலக்கை நோக்கி துரத்தும் போட்டியில் உங்கள் கனரக பீரங்கிகளை முன்னே நிறுத்தி போரிட்டு வென்று இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ தற்காப்பு முடிவை எடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். பெரிய பேட்ஸ்மேன் பின்பு வந்து வேலையை செய்யும் அளவுக்கு நிலைமை சுமூகமாக இல்லை என்பதை புரிந்து கொள்ள தவறிவிட்டீர்கள்” என்று கூறியிருக்கிறார்.






