மறுபடியும் பரிசோதனைனு அவரை வீணடிக்காதீங்க.. நமக்கு இனி நேரம் இல்ல – ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை

0
64

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் வெற்றிக் கணக்கை தொடங்குவதற்கு இரண்டு அணிகளும் ஆவலாக உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்த போட்டித் தொடர் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் நிலையில் டெஸ்டில் தென்னாபிரிக்க அணி வெற்றியும் ஒரு நாள் தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரானது இன்று முதல் நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

ஒரு நாள் தொடரில் காயத்தால் விலகி இருந்த துணை கேப்டன் சுப்மான் கில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார். மேலும் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி தயார் நிலையில் இருக்க இதை அனைவரும் உற்று நோக்குவார்கள் என்று அஸ்வின் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தியா சாம்சனுக்கு மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்குமா? அல்லது திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் களமிறங்குவார்களா? என்று பார்க்க விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவில் சஞ்சுவை பயன்படுத்த இந்திய அணி முற்பட்டது ஆனால் கில் வந்ததால் அந்த டெம்ப்ளேட்டை மாற்ற வேண்டி இருந்தது.

இதையும் படிங்க:இப்ப பும்ராவும் நம்ம தமிழ்நாட்டு பையனும் ஒரே மாதிரிதான்.. வேற மாதிரி இம்பாக்ட் பண்ணுவாரு – ஸ்ரீராம் கருத்து

பேட்டர்களுக்கு தெளிவான பார்வையை வழங்கினால் இந்தத் தொடரை நான் ஆவலுடன் எதிர் நோக்குவேன். தென்னாபிரிக்கா பேட்டிங் பலத்தில் எங்களோடு இணையக்கூடிய ஒரு அணி. ஆனால் பந்து வீச்சில் எங்கள் தரத்திற்கு அவர்களால் இருக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இந்தத் தொடர் இந்திய அணியின் பேட்டிங் லெவனை சீர் செய்வதற்கு ஒரு முக்கிய தொடராகும். ஏற்கனவே நாங்கள் பல பரிசோதனை முயற்சிகளை செய்தோம்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -