எம்எஸ் தோனி கண்டிப்பா இப்போ வருத்தத்துல இருப்பார்.. 99 சதவீதம் சிஎஸ்கே அவருக்கு பிளான் பண்ணுச்சு – இந்திய முன்னாள் வீரர்

0
71

ஐபிஎல் மினி ஏலமானது இந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்ப தயாராக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம் எஸ் தோனி தற்போது வருத்தத்தில் இருப்பார் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் வருகிற 15 ஆம் தேதி நடைபெற உள்ள மினி ஏலத்தில் கலந்துகொண்டு தங்கள் அணியில் இருக்கும் வெற்றிடங்களுக்கான வீரர்களை நிரப்ப காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பலான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஏலம் தொடங்குவதற்கு முன்பாக ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு மாற்றி அங்கிருந்து சாம்சனை எடுத்து தனது பேட்டிங் ஆர்டரை நிலை நிறுத்திக் கொண்டது.

மேலும் ஒரு ஆல் ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளர் சென்னை அணிக்கு தேவை என்று இருந்த நிலையில், ஆன்ட்ரெ ரசல் அல்லது மேக்ஸ்வெல் ஆகியோரில் இருவர் பொருத்தமாக இருப்பார் என்று சென்னை அணி தனது திட்டத்தில் வைத்திருந்தது என்று முகமது கைப் பேசியிருக்கிறார். மேலும் தற்போது இந்த இருவருமே ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருக்கும் நிலையில் எம்எஸ் தோனி நிச்சயமாக வருத்தத்தில் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “நாம் நிறைய பேசுகிறோம் இந்த முறை அதிக அணிகள் ரசலை குறி வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சமயத்தில் உரிமையாளர்கள் பணம் குறித்து எதுவும் பெரிதாக பார்க்க மாட்டார்கள். அதனால் ரசல் 25 கோடி வரை நெருங்குவார் என்று தோன்றியது. ஆனால் திடீரென்று ரசல் ஓய்வு பெற்றதால் அவர் குறித்து எம்எஸ் தோனி நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். கேகேஆர் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் நிச்சயம் சிஎஸ்கே அவரை வாங்க 99 சதவீதம் போட்டி போட்டு இருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க:விராட் கோலியை சாதாரண வீரர் மாதிரி நடத்தாதீங்க.. இந்த விஷயத்தில் முழுக்க அவர் விருப்பத்துக்கே விடுங்க – முகமது கைப் கருத்து

அதேசமயம் மேக்ஸ்வெல்லுக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரசலை அவர் பிரிவில் சேர்க்காதீர்கள். மேக்ஸ்வெல் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு சென்று கொண்டே இருப்பார் என்று நினைத்திருக்கலாம். அதனால் அந்த அவமதிப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐபிஎல் தொடரை பொருத்தவரை அவர் ஏற்றங்களை விட அதிக இறக்கங்களை சந்தித்திருக்கிறார். அதனால்தான் அவர் இந்த முடிவெடுத்திருக்க கூடும்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -