இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அதிரடியான பேட்டிங்கை மேற்கொண்டு 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன முகமது கைஃப் விராட் கோலியை அவரது தரத்தைக் கொண்டு சாதாரண வீரரை போல நடத்தாதீர்கள் என்று சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 135 ரன்கள் குவித்து தனது சிறந்த பேட்டிங் தரத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்குப் பிறகு சுமார் 35 நாட்கள் இடைவெளியில் திரும்பவும் ஒரு நாள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருக்கும் விராட் கோலி கடந்த ஆட்டத்தில் மிகுந்த புத்துணர்ச்சியோடு காணப்பட்டார்.
மேலும் விராட் கோலி தனக்கு அதிக பயிற்சி தேவையில்லை எனவும் எனது கிரிக்கெட் முற்றிலும் மனம் சார்ந்தது என்று பேசி இருந்தார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி போன்ற ஒரு வீரரை விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் தொடரில் விளையாடச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அதை அவரது விருப்பத்தின் பேரில் முற்றிலும் விட வேண்டும் என்று முகமது கைப் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக பேசும் போது “வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொருத்தவரை வீரர்கள் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்காது. விராட் கோலி சுமார் 35 நாட்களுக்குப் பிறகும் மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட் விளையாடினார், அவர் எப்படி விளையாடினார் என்று பாருங்கள். அவர் எப்படி சிக்ஸர்கள் அடித்தார் என்று பாருங்கள், இந்த வடிவ கிரிக்கெட்டில் அவர்தான் முதலாளி. அவர் அதிகமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தாலும் இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்துவதால் அவரை விஜய் அசாரே டிராபில் விளையாடச் சொல்லும்படி கட்டாயப்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க:என்னை பத்தி என்ன வேணா பேசுங்க.. கவலையே கிடையாது.. இதைத்தான் செய்வேன் – ஹர்ஷித் ராணா பேச்சு
மேலும் அங்கு தரமம் அதிகமாக இல்லை. ஒருவேளை அவர் விரும்பினால் விளையாடலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம். ஆனால் அவரை விளையாடச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. அவர் இருக்கும் தரத்தைக் கொண்டு எப்போதும் அவருக்கான கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் ரஞ்சி டிராபி போட்டியில் விராட் கோலி சிறந்த உதாரணத்தை கொடுத்தார். என்னை பொருத்தவரை ஒவ்வொரு வீரரையும் ஒரே மாதிரி நடத்தாதீர்கள்” என்று பேசி இருக்கிறார்.






