கம்பீர் கோச் பொறுப்புக்கு செட் ஆக மாட்டார்.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான் – ஏபி டிவிலியர்ஸ் பேட்டி

0
79
Gambhir

இந்திய தலைமை பயிற்சியாளரின் ஒரு குணம் அவரை அந்த பொறுப்புக்கு சரியானவராக இருக்க விடாது என ஏபி.டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான யூடியூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏபி.டிவில்லியர்ஸ் தான் அறிந்த வரையில் கம்பீர் எப்படியானவர் என்றும், அதேபோல எப்பொழுதும் இருந்தால் பயிற்சியாளர் பொறுப்புக்கு சரிவராது என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நான் பார்த்து கம்பீர் இப்படிதான்

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் தோல்வியடைந்தது. இதன் காரணமாக கம்பீர் பயிற்சியின் மீது விமர்சனங்கள் வெகுவாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் அவரை இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “இந்திய தரப்பை பற்றி நான் பேச வேண்டும் என்றால் கடினமானது. கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பில் எப்படி இருப்பார்? என்று எனக்கு தெரியாது. நான் அவரை உணர்ச்சிவசப்பட்ட ஒரு வீரராகத்தான் பார்த்திருக்கிறேன். அவர் அதே மனநிலையில் உணர்ச்சிவசப்பட்டவராக பயிற்சியாளராக இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தால் நிச்சயம் அது நல்ல விஷயமாக இருக்க முடியாது”

- Advertisement -

சிலருக்கு இப்படி வேண்டும்

“இதற்காக கம்பீர் ஒரு பயிற்சியாளராக திரை மறைவில் உணர்ச்சிவசப்பட்டவராக இருக்கிறார் என்று நான் கூறவில்லை. நான் பார்த்து அவர் அப்படித்தான் இருந்தார். தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து எனக்கு தெரியாது “

இதையும் படிங்க: அஸ்வினுக்கு செக் வைத்து வெளியே அனுப்புனது கம்பீர்தான்.. அங்க உண்மையா இதான் நடந்தது – மனோஜ் திவாரி பேச்சு

“சில வீரர்களுக்கு முன்னாள் வீரர்கள் பயிற்சி அளிப்பது வசதியாக இருக்கும். சில வீரர்களுக்கு பெரிய அளவில் விளையாடியிருக்காத பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பது வசதியாக இருக்கும். எனக்கு கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக இருந்தது மிகவும் வசதியாக இருந்தது. எனவே இது குறித்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -