இது ரொம்ப மட்டமான டீம்.. யாருக்குமே பொறுப்பு கொஞ்சம் கூட இல்ல.. ரிஷப் பண்ட் மோசம் – அஸ்வின் விமர்சனம்

0
29
Ashwin

இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று அசாம் மாநிலம் கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று தொடரையும் இழந்தது.

- Advertisement -

அதிர்ச்சி அளித்த இந்திய அணி

இந்திய அணி ஆட்டம் இழந்த விதம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. பேட்மேன்கள் சாதாரண பேட்டிங் டெக்னிக்கை பின்பற்றி கூட விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. மிகச் சாதாரணமாக விக்கெட்டை இழந்தார்கள்.

குறிப்பாக தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த பத்ரிநாத் மற்றும் அபிநவ் முகுந்த் ஆகியோர் இந்திய வீரர்கள் எவ்வளவு மலிவான தப்புகளை செய்கிறார்கள் என்பது குறித்து மிக விரிவாக பேசி இருந்தார்கள். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

மட்டமான டீம்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்த இந்திய அணி மட்டமான முறையில் டிபென்ஸ் ஆடுகிறது. இவர்களுக்கு சுத்தமாக தற்காப்பு ஆட்டம் எப்படி ஆட வேண்டும் என்று தெரியவில்லை. ஸ்டப்ஸ் தற்காப்பு ஆட்டம் விளையாடத் தெரியாமல் அவராக ஒன்றை உருவாக்கி விளையாடியது போல கூட, இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே போராடவில்லை. இதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது”

இதையும் படிங்க : நம்மள பாத்து பயந்து கிடந்த எதிரணிகள்.. இப்போ எதிர்த்து விளையாட உற்சாகமா இருக்காங்க – தினேஷ் கார்த்திக் வேதனை

“இந்திய அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. தற்காப்பு ஆட்டம் பற்றி பயிற்சியாளர் சொன்னால் ஒரே நாளில் இவர்கள் மாறி விடுவார்களா? இவர்களுக்கு என்று தனியாக எந்த பொறுப்பும் இருந்ததாக தெரியவில்லை. ரிஷப் பண்ட் தன்னுடைய மொத்த திறமையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார். அவராகத் தெரிந்தால் மட்டும் தான் உண்டு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -