தற்போது இந்திய டெஸ்ட் அணியின் மோசமான தோல்விகளுக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய லெஜெண்ட் அனில் கும்ப்ளே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் நியூசிலாந்துக்கு அடுத்து இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து இருக்கிறது.
கம்பீர் அணுகுமுறை சரியா?
கம்பீர் அதிக ஆல் ரவுண்டர்களை வைத்து பேட்டிங் வரிசையை நீளமாகக் கொண்டு விளையாட எப்போது விரும்புகிறார். இது குறிப்பாக டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் சரியான அணுகுமுறையாக இருக்கிறது. அதே சமயத்தில் இது ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு சரியான அணுகுமுறையாக இருக்காது.
எனவே அவர் இந்த அணுகு முறையை கைவிட்டு சரியான வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டி இருக்கிறது. மேலும் டெஸ்ட் வடிவத்தை பொருத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் தான் எந்த இடத்தில் விளையாட போகிறோம் என்பது குறித்த தெளிவு இருப்பது அவசியம். ஆனால் கம்பீர் நிலையான பேட்டிங் வரிசையை எப்பொழுதும் அமைப்பது கிடையாது என்பதும் விமர்சனத்தை அதிகரிக்கிறது.
தோல்விக்கு இதுதான் காரணம்
இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசும் பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகுவதற்கு வித்தியாசமான மனநிலை தேவை. ஒரு அணியில் இத்தனை ஆல்ரவுண்டர்கள் இருக்க முடியாது. இவ்வளவு வெட்டுதல்களும் மாற்றங்களும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் புதிதாக வருகிறார். யாராவது இரண்டு வீரர்கள் வெளியேறுகிறார்கள்”
இதையும் படிங்க : டெஸ்ட் கோச் பதவிக்கு நீங்கள் தகுதியானவரா?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு கம்பீர் தந்த பதில்.. ரசிகர்கள் விமர்சனம்
“இந்திய அணி நிர்வாகம் தற்பொழுது உட்கார்ந்து யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது கிடைத்திருக்கும் முடிவுகளை நாம் மறக்க முடியாது. கடந்த 6 முதல் 8 மாதத்தில் பல முன்னணி வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொலைநோக்கான ஒரு திட்டம் நம்மிடம் இருக்க வேண்டும்? என்று கூறி இருக்கிறார்.






