ஆசஸ் முதல் டெஸ்ட்.. ஒரே நாளில் 19 விக்கெட்.. ஸ்டார்க் புதிய சாதனை.. ஸ்டோக்ஸ் தெறி சம்பவம்

0
178
Stokes

இன்று வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டியில் முதல் நாளில் மட்டும் பத்தொன்பது விக்கெட்டுகள் சரிந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விளையாடாததால் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். மேலும் ஆஸ்திரேலியா அணியில் இரண்டு வீரர்கள் அறிமுகமானார்கள். இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் இல்லாமல் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றார்கள்.

- Advertisement -

12 ரன் ஐந்து விக்கெட்

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி 0, பென் டக்கெட் 21, ஒல்லி போப் 46, ஜோ ரூட் 0, ஹாரி புரூக் 52, பென் ஸ்டோக்ஸ் 6, ஜெமி ஸ்மித் 33 ரன் என சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி கடைசி 12 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 12.5 ஓவர்கள் பந்துவீசி 4 மெய்டன்கள் உடன் 58 ரன்கள் கொடுத்து மொத்தம் ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இது அவருக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாக பதிவாகியது. அறிமுக வேகப் பந்துவீச்சாளர் டாகெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

ஸ்டோக்ஸ் அசத்தல்

இதைத்தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணியின் அறிமுகத் துவக்க ஆட்டக்காரர் வெதாரால்ட் 0, லபுசேன் 9, ஸ்மித் 17, கவாஜா இரண்டு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆஸ்திரேலியா அணி 31 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஹெட் மற்றும் கேமரூன் கிரீன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்க பார்த்தார்கள்.

இதையும் படிங்க: தெஆ 2வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 முக்கிய மாற்றங்கள்.. கம்பீருக்கு நெருக்கடி

இந்த நிலையில் பந்து வீச்சுக்கு வந்த ஸ்டோக்ஸ் ஹெட் 21, கேமரூன் கிரீன் 24, அலெக்ஸ் கேரி 26, மிட்சல் ஸ்டார்க் 12, ஸ்காட் போலன்ட் 0 ரன் என அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது அதிரடியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 123 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இன்று முதல் நாளில் மட்டுமே மொத்தம் 19 விக்கெட்டுகள் சரிந்து இருக்கிறது.

- Advertisement -