கேப்டன் கில் எனக்காக இதை மட்டும் செய்.. நான் நிச்சயம் அத பண்ணி தரேன்.. சிராஜ் செய்த சம்பவம்

0
54
Siraj

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் செய்த ஒரு காரியம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா இடங்களின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

வெறும் மூன்று ஓவர்கள்

இந்த போட்டியில் முதலில் பந்து வீச வந்த இந்திய அணிக்கு பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் துவங்கினர். ஒரு முனையில் சிராஜ் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி ஓவருக்கு எட்டு ரன்கள் மேல் கொடுத்தார். இதன் காரணமாக கேப்டன் பில் அவருடைய ஸ்பெல்லை மூன்று ஓவரில் நிறுத்திவிட்டார். அதைத் தொடர்ந்து அக்சர் படேலை கொண்டு வந்தார்.

இதற்கு அடுத்து மீண்டும் இரண்டாவது ஸ்பெல்லுக்கு வந்த முகமது சிராஜால் விக்கெட் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா இருவரும் டிக்கெட் கைப்பற்றினார்கள். இதன் காரணமாக முகமது சிராஜிக்கு ஒரு பக்கத்தில் அழுத்தம் ஏற்பட்டது.

- Advertisement -

சிராஜ் செய்த சம்பவம்

இந்த நிலையில் மூன்றாவது ஸ்பெல்லுக்கு வந்த முகமது சிராஜால் அப்பொழுதும் டிக்கெட்டை பெற்ற முடியவில்லை. இதன் காரணமாக அவரது பந்துவீச்சை நிறுத்த கேப்டன் கில் முடிவு செய்தார். இந்த நிலையில் முகமது சிராஜ் கேப்டனிடம் தனக்கு இன்னும் ஒரே ஒரு ஓவர் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். கேப்டன் கில்லும் ஒரு ஓவர் கூடுதலாக கொடுத்தார்.

இதையும் படிங்க : உலக சாம்பியன் அவ்வளவு பேசிட்டு.. தெஆ இந்த தப்பை பண்ணியிருக்க கூடாது.. அநியாய பொட்டலம் – கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து

இந்த கூடுதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் வெர்ரின்னே விக்கெட்டை எல்பிடபிள்யு மூலம் வீழ்த்தினார். இதற்கு அடுத்து அதே ஓவரின் நான்காவது பந்தில் மார்க்கோ யான்சன் விக்கெட்டை கிளீன் போல்டு மூலம் வீழ்த்தினார். இதன் காரணமாக தேனீர் இடைவேளையின் போது 154 ரன்னுக்கு எட்டு விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா இழந்தது. முகமது சிராஜ் செய்த இந்த சம்பவத்தை கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -