இந்தியா டி20 சீரிஸ்.. வெளியேறும் முக்கிய ஆஸி நட்சத்திர வீரர்.. இந்த தொடர் தேவையா?.. ரசிகர்கள் கடுமையான விமர்சனம்

0
254
Heaf

தற்போது இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் விலகி இருக்கிறார். இதன் காரணமாக இந்த தொடர் தேவையா என ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள்.

தற்போது இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று இருக்க மழையின் காரணமாக ஒரு போட்டி நடைபெறவில்லை. எனவே கடைசி இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

- Advertisement -

விலகும் முக்கிய வீரர்

அடுத்து ஆஸ்திரேலியா அணி வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக டி20 தொடரில் இருந்து முன்னணி வீரர்கள் பலரும் விலகிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விலகி இருக்கிறார். ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி பெறும் விதமாக அவர் இந்திய டி20 தொடரை விட்டு விலகுகிறார் என அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்

இந்த நிலையில் இந்திய டி20 தொடருக்கு முக்கியத்துவத்தை சிறிதும் தராமல், தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கும் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த டி20 தொடரை இழப்பது குறித்து அவர்களுக்கு எந்த இந்த டி20 தொடரை இழப்பது குறித்து அவர்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று தெரிகிறது.

இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட் தேவையில்லாதது.. ஸ்ரீனிவாசனின் 14 ஆண்டுக்கால கருத்தால் மீண்டும் சர்ச்சை.. பதிலடி தந்த இந்திய மகளிர் அணி

ஹேசில்வுட் இரண்டு போட்டிகளிலும் சீன் அப்போட் மூன்று போட்டிகளிலும் விளையாடி வெளியேறினார்கள். இந்த நிலையில் ஹெட் வெளியேறுகிறார். இதன் காரணமாக இப்படி ஒரு முக்கியத்துவமே இல்லாத தொடரை எதற்காக நடத்த வேண்டும்? இந்திய அணி இன்று தொடரில் விளையாடு இருக்கவே கூடாது என இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -