தற்போது நடைபெற்று வரும் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையறுதியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது நல்லது தான் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலீசா ஹீலி கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய பெண்கள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணிக்கு சாதகம்
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் அலீசா ஹீலி ஜெமிமாவுக்கு இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது.
மேலும் பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அசுரபலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணியை விட அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற அணியாக இருக்கிறது. மற்ற அணிகளை உலகக் கோப்பையை வெல்ல விடுவதே இல்லை.
இந்த தோல்வி நல்லது தான்
இது குறித்து பேசி இருக்கும் அலீசா ஹீலி போகும்போது “தற்போது உலகக் கோப்பை புதிய வெற்றியாளரை பார்ப்பது பல நல்ல விஷயங்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும். இந்த தொடருக்கும் இந்தப் போட்டிக்கும் இந்தியாவில் எப்படியான ஆதரவு கிடைத்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது சிறப்பாக இருக்கிறது. மேலும் ஒரு உலகக் கோப்பையில் தங்களது சொந்த நாட்டில் இறுதி போட்டியில் விளையாடுவது அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்”
இதையும் படிங்க : இந்திய வீராங்கனைகளை சமையலறையில் வைத்து மீம் போட்டார்கள்.. இதயம் உடைந்தது.. ஆனா நேத்து – ஆகாஷ் சோப்ரா பேட்டி
“எனவே இது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு நல்ல விஷயங்களை செய்யும் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமான அளவில் திறமையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் இறுதிப் போட்டியில் இருப்பதை பார்ப்பது சிறப்பாக இருக்கும். இந்த தோல்வி எங்களுக்கு கொஞ்சம் வலி கொடுக்கவே செய்யும். ஆனாலும் இவர்கள் மோதிக் கொள்வது உலகளாவிய அளவில் கிரிக்கெட்டுக்கு சில சாதகமான விஷயங்களை செய்யும். மேலும் இந்த இரு நாடுகளும் பெண்கள் கிரிக்கெட்டில் இன்னும் முன்னேறுவதற்கு முதலீடு செய்வதை நாம் பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.






