2 வார்த்தைக்கு மேல பேச மாட்டாரு.. ஆனா இப்போ அவர்கிட்ட அமைதியா இருங்கன்னு கெஞ்சுறேன்.. கேஎல் ராகுல் நகைச்சுவை

0
188

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரானது இன்று முதல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் இரண்டு அணிகளும் மிக தீவிரமான பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் குறித்து கேஎல் ராகுல் சில நகைச்சுவையான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இதில் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இனிவரும் ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் இந்தத் தொடர் இந்திய அணிக்கு பெரிய அளவில் அனுபவமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இறுதிக்கட்டத்தில் இவரது ஓவர்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. இவர் முதன் முதலில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது அனைவராலும் அறியப்பட்டார். அப்போது கேப்டனாக இருந்த கே எல் ராகுல் இவர் குறித்த சில நகைச்சுவையான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “அர்ஸ்தீப் சிங் சில நேரங்களில் கட்டுப்பாட்டை மீறுவார். நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தபோது 18 வயதில் அவரை சந்தித்தேன். நான் அவரை இரண்டு மூன்று ஆண்டுகள் கேப்டனாக பார்த்தேன். அதனால் அவர் மீது எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அவரை ஒரு தம்பியாக என்னால் பார்க்க முடிந்தது. அப்போது அவர் என்னிடம் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பெரிதாக எதுவும் பேச மாட்டார். ஒருவேளை அவர் தனது குழுவுடன் அதிகம் பேசுபவராக இருக்கலாம்.

இதையும் படிங்க:ஆஸி டி20 தொடரில்.. இந்த இந்திய வீரர்தான் அதிக ரன் எடுப்பார்.. டி20 சூப்பர் ஸ்டார் – மைக்கேல் கிளார்க் கணிப்பு

அந்த சமயத்தில் அவரும் ரவி பிஷ்னாய் அதிகம் பேச மாட்டார்கள். அதற்குப் பிறகு எனக்கு 26 அல்லது 27 வயதாக இருக்கும். அந்த சமயத்தில் பேருந்தில் அந்த இரண்டு வீரர்களையும் பார்த்தேன் அவர்கள் அப்போது அண்டர் 19 விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் எதுவுமே பேச மாட்டார்கள். ஆனால் அதற்கு அடுத்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அதன் பிறகு பேச ஆரம்பித்தவர்கள் இப்போது வரை நான் அவர்களை அமைதியாக இருக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -