அடேங்கப்பா ஸ்ரேயாஸ் ஐயர் அணிந்துள்ள இந்த ஸ்டிக்கரை பயன்படுத்த இவ்வளவு செலவாகுமா – ஸ்டிக்கரை பற்றி வெளிவந்த ரகசியம்

0
268

ஸ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்திருந்தால் நிச்சயம் அவருடைய வலது கை ட்ரைசெப்ஸில் ‘கே’ என்ற சின்னத்துடன் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பு உண்டு.

கே என்ற சின்னம் இருப்பதால் அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குறிக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அடிப்படையில் அந்த கே ஸ்டிக்கர் விலை உயர்ந்த கேஜெட் ஆகும்.bl அல்ட்ராஹுமன் எனப்படும் பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் விலையுயர்ந்த ஃபிட்னஸ் கேஜெட் தான் அது. அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அதை தற்போது ஸ்ரேயாஸ் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த கேஜெட் அப்படி என்ன செய்யும்

அல்ட்ராஹுமன் எம் ஒன் எனப்படம் இந்த கேஜெட்டில் ஒரு பயோ சென்சார் இருக்கும். உங்களுடைய கையில் நீங்கள் இதை அணிந்து கொள்ளும் நேரத்தில் அந்த சென்சார் உங்களது இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் பிறவற்றைக் தொடர்ந்து அளவிட்டுக் கொண்டே இருக்கும். இந்த அளவுகளை நாம் நம்முடைய தொலைபேசியில் தெரிந்துகொள்ளலாம். இந்த கேஜெட் ஐபோன் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

நம்முடைய உடலில் ஒவ்வொரு நிமிடமும் ரத்த குளுக்கோஸ் அளவு மாறிக்கொண்டே இருக்கும்.எனவே, இந்த சாதனம் நிகழ்நேரத்தில் நமது உடலில் எவ்வளவு ஆற்றல் இருக்கின்றது மற்றும் நாம் எப்போது தூங்க வேண்டும், சாப்பிட வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைச் சரியாக நமக்கு கணித்துச் சொல்லும்.

- Advertisement -

கே ஸ்டிக்கர் கேஜெட் பற்றிய விலை விபரம்

இந்த நிறுவனம் மோஹித் குமார் மற்றும் வத்சல் சிங்கால் ஆகியோரால் நிறுவப்பட்டது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களுடைய ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை புரிந்துகொள்ள இந்த கருவி மிகப் பெரிய அளவில் உதவும். அது மட்டுமின்றி நீரிழிவு நோய் இல்லாதவர்கள் கூட இந்த கருவியை பயன்படுத்தி நம்முடைய குளுக்கோஸ் அளவை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நம் உடலை நன்றாக பார்த்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே இந்த அல்ட்ராஹுமன் கேஜெட் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராஹுமன் சிப் பல்வேறு சந்தா தொகுப்புகளுடன் வருகிறது. 2 வார பயன்பாட்டிற்கு ரூ.4,999, 12 வார பயன்பாட்டிற்கு ரூ.24,999 மற்றும் 52 வார பயன்பாட்டிற்கு ரூ.1,04,999 ஆகும். கே ஸ்டிக்கர் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மாற்றப்பட வேண்டும். தோராயமாக ஒரு வருடத்திற்கு நாம் இதை பயன்படுத்தி நம்முடைய ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை தெரிந்துகொள்ள வேண்டுமானால் நமக்கு ஒரு லட்ச ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.