99 ரன்.. 9 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டி வீசிய இலங்கை.. சின்னசாமி மைதானத்தில் மோசமான சாதனை.. உலக சாம்பியனுக்கு நேர்ந்த சோகம்!

0
564
England

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பெங்களூரு மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது.

அரைஇறுதி வாய்ப்பில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளுமே களம் இறங்கியது.

- Advertisement -

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தமுறை முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்த முறையும் இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ் மூவரும் கொண்டுவரப்பட்டார்கள்.

இலங்கை அணியின் தரப்பில் அனுபவ வீரர் முன்னாள் கேப்டன் ஆஞ்சிலோ மேத்யூஸ் கொண்டுவரப்பட்டார். பேட்டிங் செய்ய சாதகமான மற்றும் சிறிய மைதானமான பெங்களூரில், டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதால், பெரிய ரன் மழை இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இங்கிலாந்து இந்த முறைதான் மோசமாக விளையாடியது.

முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் டேவிட் மலான் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது விக்கெட்டாக ஜோ ரூட் 57 ரன்களுக்கு வெளியேறினார். மேற்கொண்டு 99 ரன்கள் எடுப்பதற்குள் இந்த இடத்தில் இருந்து, ஜோ ரூட் விக்கெட்டோடு சேர்த்து, 9 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்து அணி 33.2 ஓவரில் 156 ரன்களில் சுருண்டது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு டேவிட் மலான் 28, ஜானி பேர்ஸ்டோ 30, ஜோ ரூட் 3, பென் ஸ்டோக்ஸ் 43, ஜோஸ் பட்லர் 8, லியாம் லிவிங்ஸ்டன் 1, மொயின் அலி 15, கிறிஸ் வோக்ஸ் 0, டேவிட் வில்லி 14*, ஆதில் ரஷீத் 2, மார்க் வுட் 5 என ரன்கள் எடுத்தார்கள். இதில் ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

இலங்கை தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய லகிரு குமாரா 3, மேத்யூஸ் 2, ரஜிதா 2, தீக்ஷனா 1 என விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இன்று திடீரென விளையாடும் வாய்ப்பை பெற்ற, அனுபவ வீரர் மேத்யூஸ், தன்னுடைய இருப்பு எப்படியான தாக்கத்தை கொடுக்கும்? என்று நிரூபித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இலங்கை மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இதுவே மோசமான ஒருநாள் கிரிக்கெட் ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது!