84 ரன்.. 10 விக்கெட்.. இலங்கையை அடித்து சுருட்டிய ஆஸி.. உலக கோப்பையில் முதல் வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பு!

0
458
Australia

நடப்பு உலகக்கோப்பை 14ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் புதிய கேப்டன் குஷால் மெண்டிஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். ஐபிஎல் புகழ் பதிரனா நீக்கப்பட்டார்.

- Advertisement -

ஏற்கனவே தோல்வி பாதையில் இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்த போட்டியில் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பெரிய சோதனையை கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் வர முடியாது தோல்விதான் நிச்சயம் என்கிற நிலையே இருந்தது.

இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்கள். நிசங்கா 67 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 21.4 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

இதற்கு அடுத்து அதிரடியாக விளையாடிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா 82 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து, அணியில் ஸ்கோர் 157 ரன்கள் இருந்தபோது ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இங்கிருந்து அப்படியே இலங்கை அணி மொத்தமாக சரிந்தது. இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் 9, சமரவிக்கிரமா 8, தனஞ்செய டி சில்வா 7, வெல்லாலகே 2, சமிக கருணரத்தினே 2, மதிச தீக்ஷனா 0, லகிரு குமாரா 4, சரித் அசலங்கா 25, லகிரு குமார 0* என ரன்கள் எடுக்க 43.3 ஓவரில், 29 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட்டுகள், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். 125 ரன்களுக்கு விக்கெட் இழக்காத இலங்கை அணி, அடுத்த 84 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.