அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகள்

0
230
T20 WorldCup 2022

டி20 உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் புதிய டி20 உலக சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் ஐசிசி அடுத்த ஆண்டுக்கான உலக கோப்பை வேலையில் இறங்கி விட்டது. இன்னமும் பல மாத காலங்கள் இருக்கும் நிலையிலேயே அடுத்த உலக கோப்பையில் பங்கேற்கும் பிரதான 8 அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு எப்படி எட்டு அணிகள் நேராக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது அதேபோல அடுத்த ஆண்டுக்கும் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த ஆண்டு நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளுள் ஏழு அணிகள் அடுத்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. 2 தகுதி பெற முடியாத பெரிய அணைகள் யார் என்றால் அது இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தான். கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடர்களில் முறையே கோப்பை வென்ற இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்த ஆண்டு தகுதி பெற முடியாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தம் தான். இந்த ஆண்டு தகுதிச்சுற்று விளையாடி சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த வங்கதேச அணி அடுத்த ஆண்டு நேரடியாக நுழைந்துவிடும். இதற்கு காரணம் இந்த அணி கடைசியாக தங்களது சொந்த மைதானத்தில் பெற்ற வெற்றிகள் ஆகும்.

அதேபோல சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிச்சுற்று விளையாடும் 8 அணிகளும் நான்கு அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அவை வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளாகும். இந்த அணியில் உடன் மோதப் போகும் மற்ற நான்கு அணிகள் இன்னுமொரு தகுதிச்சுற்று விளையாடி தேர்வு பெறும். சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளுள் இந்த ஆண்டு இறுதிப் போட்டி விளையாடிய இரண்டு அணிகள் மற்றும் தொடரை நடத்தும் ஆஸ்திரேலிய அணி என்று மூன்று அணிகள் மற்றும் ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் என்று எட்டு அணிகள் தேர்வு செய்யப்படும். புதிதாக தகுதி சுற்றில் இருந்து வரப்போகும் அணிகள் எதுவும் பெரிய அணிகளை வீழ்த்துமா என்று ரசிகர்கள் அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.