2021 டி20 உலகக் கோப்பையில் மற்ற நாடுகளுக்கு விளையாடும் 8 தென்னாபிரிக்க வீரர்கள்

0
274
Devon Conway and David Wiese

2021 டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. அதில் பங்கேற்கும் 16 அணிகளில் தென்னாபிரிக்காவும் ஒன்று. ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற அவர்களின் கனவு இன்னுமும் கனவாகவே உள்ளது. தென்னாபிரிக்கா அணியில் டு பிலஸிஸ், தாஹிர் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.

பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்க்காக இதுவரை பல வீரர்கள் ஆடியுள்ளானர். முக்கியமாக தென்னாபிரிக்கா நாட்டில் பிறந்த பல வீரர்கள் மற்ற நாடுகளுக்கு சிறப்பாக ஆடி பிரபலம் அடைந்துள்ளனர். உதாரணமாக கிராண்ட் எலியட் ( 2015 உலகக் கோப்பை ). தற்போது நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த 8 வீரர்கள் மற்ற அணிகளுக்காக ஆடுகின்றனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

ரோலோஃப் வான்‌டர் மெர்வே

ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் வான்‌டர் மெர்வே, முன்னொரு காலத்தில் தென்னாபிரிக்காவிற்காக விளையாடினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 2021 டி20 உலகக் கோப்பையில் அவர் நெதர்லாண்ட்ஸ் அணிக்காக ஆடினார். எனினும் அவ்வணியால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

ஜேசன் ராய்

இங்கிலாந்து அதிரடி ஒப்பனர் டர்பன் நகரத்தில் பிறந்தவர். 2019 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியிலும் இவர் இருந்தார். ஏற்கவனே ஐ.பி.எலில் சிறப்பாக ஆடினார். அதே வேகத்தில் டி20 உலகக்கோப்பையிலும் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

குர்திஸ் கேம்ப்பர்

சமீபத்தில் சூப்பர் 12க்கு தகுதிபெருவதற்கான சுற்றில் டபுள் ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஜோஹன்ஸ்பர்க்கில் பிறந்த கேம்ப்பர் இவ்வுலகக்கோப்பையில் அயர்லாந்து நாட்டிற்காக ஆடினார். எனினும் அவர்களால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

- Advertisement -

ஷேன் கெட்கேட்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு அயர்லாந்து வீரர் ஷேன் கெட்கேட். இவர் டர்பன் நகரத்தில் அக்டோபர் 2, 1991 ஆம் தேதி பிறந்தார். அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர்.

டேவிட் வீஸ்

கடைசியாக நடந்த 2016 டி20 உலகக்கோப்பையில் டேவிட் வீஸ், தென்னாபிரிக்கா அணிக்காக ஆடினார். ஐந்து வருடம் கழித்து தற்போது அவர் நமீபியா நாட்டிற்காக ஆடி வருகிறார். வீஸின் அதிரடி ஆட்டத்தால் நமீபியா அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது எனது குறிப்பிடத்தக்கது.

டேவோன் கான்வே

நியூசிலாந்து இடதுகை பேட்ஸ்மேனான டேவோன் கான்வே 2020ஆம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இத்தொடரில் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக இவர் கருதப்படுகிறார்.

கிளென் பிலிப்ஸ்

தென்னாபிரிக்காவில் பிறந்து அணிக்காக ஆடும் மற்றொரு நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ். 2021 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாட உள்ளார். மேலும், அவ்வணியின் விக்கெட் கீப்பராகவும் அவர் செயல்படயுள்ளார்.

டாம் கர்ரன்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு இங்கிலாந்து வீரர் டாம் கர்ரன். முதலில் ரிசர்வ் வீரராக தான் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.பி.எலில் தன்னுடைய சகோதரன் சாம் கர்ரனுக்கு காயம் ஏற்ப்பட்டது. அதனால் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக டாம் கர்ரன் சேர்க்கப்பட்டார்.