லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ரோகித் சர்மாவை விட வயது குறைவான 8 வீரர்கள்

0
214
Rohit Sharma

கடந்த சனிக்கிழமை கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் இந்தியா லெஜன்ட்ஸ் மற்றும் தென்ஆப்பிரிக்க லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையே துவங்கியது. இந்தப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ்அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணி பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது. இலங்கை லெஜன்ட்ஸ் ஆஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தச் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து லெஜெண்ட்ஸ் அணிகளும் இருக்கின்றன. இந்த தொடரில் பங்கு பெற்றுள்ள அணைகளில் உள்ள நிறைய வீரர்களின் வயது நாற்பதுக்கு மேல். ஆனால் சில வீரர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் வயதை விட குறைவானவர்கள். அவர்களைத்தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். ரோகித் சர்மாவின் வயது 35!

அபிமன்யு மிதுன்:

இந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரின் வயது 32 ஆண்டுகள் 313 நாட்கள் ஆகும். இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இவரது வேகப்பந்து வீச்சு சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

திமன் கோஸ் :

இந்த பங்களாதேஷ் வீரரை நிறைய ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. இவரது வயது 34 ஆண்டுகள் 284 நாட்கள் ஆகும். பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இவர் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆவார்.

அபுல் ஹஸன் :

பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியில் இருந்து இன்னொரு வீரர். இவரது வயது 30 வருடங்கள் 29 நாட்கள்.

இசுரு உதான:

34 வயதான இந்த இலங்கை வீரர் இடக்கை மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். தற்போது இவர் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

திசாரா பெரேரா:

33 வயதான இந்த இலங்கை வீரர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். மேலும் இலங்கையின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் விளையாடி வருகிறார்.

தில்ஷான் முனவீர:

ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிராக இந்த இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் விளாசிய 95 ரன்கள் சிறப்பானது. இவரது வயது 33 ஆண்டுகள் 132 நாட்களாகும்.

இஸ்ஹான் ஜெயரத்ன :

முப்பத்தி மூன்று வயதான இந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தற்போது இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

சதுரங்க டி சில்வா :

இந்தப் பட்டியலில் இன்னுமொரு இலங்கை வீரர். இடது கையில் மெதுவாக சுழற்பந்து வீசும் பந்துவீச்சாளரான இவரது வயது 32 ஆண்டுகள் 229 நாட்கள் ஆகும். இந்தப் பட்டியலில் நிறைய இலங்கை வீரர்கள் இருப்பது, சமீபத்தில் நிறைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றதை காட்டுகிறது!