8 ஓவர் ஆட்டம்; ரோகித் சர்மா அதிரடி ; இந்தியா வெற்றி; வீடியோ இணைப்பு!

0
2338
Rohit Sharma

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநில மொகாலியில் நடந்தது அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

இதையடுத்து இரண்டாவது ஆட்டம் இன்று நாக்பூரில் நடந்தது. மழையால் தாமதமான இந்த ஆட்டத்திற்கு 8 ஓவர்கள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் வெளியே போய் பும்ரா வந்திருந்தார். மேலும் எட்டு ஓவர் என்பதால் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டு புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய துவக்க ஜோடியில் கேமரூன் கிரீனை அக்சர் படேல் ரன் அவுட் செய்தார். மேலும் மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் இருவரையும் அக்சர் படேல் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 15 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் 19 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுக்க, 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 90 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சூரியகுமார் முதல் பந்திலேயே வெளியேறினார். இவர்கள் மூன்று பேரையும் ஆடம் ஜாம்பா வெளியேற்றினார்.

ஆனால் ஒரு முனையில் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர்களாக பறந்தது. 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்து வெளியேறி உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். இதையடுத்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை யாருக்கு என்று நிர்ணயிக்கும் கடைசி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. ரோகித் சர்மா அடித்த சிக்ஸர்களுக்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -