டாப் 10

ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் சதமடித்த 7 வீரர்கள்

டி20 போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியை போல நிறைய ஓவர்கள் இந்த பார்மெட்டில் இருக்காது. 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் மட்டுமே ஒரு வீரரால் சதம் அடிக்க முடியும். அதிலும் குறிப்பாக சர்வதேச போட்டிகளில் சதம் அடிப்பது மிகவும் கடினமான விஷயம்.

- Advertisement -

2007 தொடங்கி நடந்து வரும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இதுவரை 8 சதங்கள் மட்டுமே ஒட்டுமொத்த வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளது. அப்படி ஐசிசி நடத்தி வரும் உலக கோப்பை டி20 தொடரில் இதுவரை சதமடித்த அந்த 7 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

கிறிஸ் கெய்ல்(2007 & 2016) – 117(57) & 100(48)*

டி20 போட்டிகள் என்று வந்துவிட்டாலே இவரை நினைக்காமல் இருக்க மாட்டோம். அந்த அளவுக்கு நிறைய சாதனைகளை இந்த குறிப்பிட்ட பார்மெட்டில் அவர் தனது கைவசம் வைத்திருக்கிறார். ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே.

2007ஆம் ஆண்டு நடந்த முதல் உலக கோப்பை டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 57 பந்துகளில் 117 ரன்கள் அந்த போட்டியில் குவித்தார். அந்தப் போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 205.26 ஆகும்.

- Advertisement -

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 48 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 208.33 ஆகும்.

சுரேஷ் ரெய்னா(2010) – 101(60)

இந்திய வீரர்கள் மத்தியில் ஒரு சிலரே டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று பார்மெட்டிலும் சதமடித்து இருக்கின்றனர். அதில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். சுரேஷ் ரெய்னா 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 168.33 ஆகும். சுரேஷ் ரெய்னா அந்தப் போட்டியில் அற்புதமாக விளையாடிய காரணத்தினால் தென்னாபிரிக்க அணியை போட்டியின் முடிவில், 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மஹேல ஜெயவர்தன (2010) – 100(64)

உலக கோப்பை டி20 தொடரை பொறுத்தவரை யில் அதிக ரன்கள் குவித்த வீரராக மஹேல ஜெயவர்தன முதலிடத்தில் இருக்கிறார். மொத்தமாக முப்பத்தி ஒரு போட்டிகளில் 1016 ரன்கள் இவர் குவித்திருக்கிறார். உலக கோப்பை டி20 தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 39.07 ஆகும்.

2010 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 64 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் அந்த போட்டியில் 156.25 ஆக இருந்தது. போட்டியின் முடிவில் இலங்கை அணி வெற்றியும் கண்டது குறிப்பிடத்தக்கது.

பிரண்டன் மெக்கல்லம் (2012) – 123(58)

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிரடியாக விளையாடிய வீரர்களில் மிக முக்கியமானவர் பிரண்டன் மெக்கல்லம். இவர் ஆடிய சமயத்தில் இவருடைய அதிரடி ஆட்டத்தை கண்டு அவருக்கு பந்துவீச பந்துவீச்சாளர்கள் நடுநடுங்கி போவார்கள். 2012ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இருந்து தொடர்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 212.06 ஆக இருந்தது.

அலெக்ஸ் ஹேல்ஸ் (2014) – 116(64)*

2019 ம் ஆண்டுக்கு முன்வரை இங்கிலாந்து அணியின் ஓபனிங் வீரர்கள் அதிரடியாக விளையாடி வந்த வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் 2019ஆம் ஆண்டு முதல் இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடாமல் இருக்கிறார். இவர் 2014ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 116 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அந்த போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு அமைத்த 190 ரன் டார்கெட்டை மோர்கன் உடன் இணைந்து மிக அற்புதமாக அலெக்ஸ் ஹேல்ஸ் சேஸ் செய்தார். அந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 181.25 ஆக இருந்தது.

அகமது சேஷாத் (2014) – 111(62)*

பாகிஸ்தான் அணியை சேர்ந்த இவர் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையான பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டவராவார். 2014ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 62 பந்துகளில் 111 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 179.03 ஒன்றாக இருந்தது. அந்த இவருடைய அற்புதமான சதம் காரணமாக போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தமிம் இக்பால் (2016) – 103(63)*

பங்களாதேஷ் அணையில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு சில கிரிக்கெட் வீரர்களில் இவர் முதன்மையானவர் ஆவார். 2014 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஊற்றிக் கொண்டுவிடும் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 63 பந்துகளில் 3 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 163.49 ஆக இருந்தது. போட்டியின் முடிவில் பங்களாதேஷ் அணி சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஓமன் அணியை 65 ரன்கள் மட்டுமே குவிக்க விட்டு வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

Published by