40+ வயதிலும் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள்

0
176
Sanath Jayasuriya and Brad Hogg

மதிப்புமிக்க கிரிக்கெட் தொடர்களில் டி20 உலகக்கோப்பையும் ஒன்று. ஒவ்வொரு வீரருக்கும் உலகக்கோப்பையில் விளையாட வேண்டுவென்ற ஏக்கம் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்கும். ஒரு சில வீரர்கள் 20 வயதிலேயே உலகக்கோப்பையில் தடம் படைத்துள்ளனர். வாய்ப்புக் கிடைக்காத வீரர்களும் சோர்ந்து போகாமால், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றிப் பெற்றுள்ளனர்.

எந்த வேலையையும் முழு மனதோடு செய்தால், வயது வெறும் எண்ணாகவே தெரியும். கிரிக்கெட் வீரர்கள் பலர், நாற்பது வயது தாண்டியும் அணிக்கு சேவை செய்து வருகின்றனர். அப்பட்டியலில் கிறிஸ் கெயில் தற்போது இணைந்துள்ளார். இதற்கு முன்பும், 40 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் ஆடி உள்ளனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

குர்ரம் கான் – 2014 டி20 உலகக்கோப்பை

யுஏஇ, ஒரே ஒரு முறை தான் டி20 உலகக்கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. 40+ வயதான குர்ரம் கான் வளைகுடா நாட்டிற்காக 3 இன்னிங்சில் 74 ரன்கள் அடித்தார்.

முனிர் தர் – 2014 டி20 உலகக்கோப்பை

இப்பட்டியலில் இருக்கும் அடுத்த வீரர் முனிர் தர். 2014 டி20 உலகக்கோப்பையில் முனிர் ஆடிய போது அவருக்கு வயது 40+ ஆகும். இவர் ஹாங் காங் நாட்டிற்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியான் கேம்ப்பெல் – 2016 டி20 உலகக்கோப்பை

கேம்ப்பெல், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காகாவும் ஐ.சி.எலில் அகமதாபாத் அனிக்காகாவும் ஆடினார் என்பது பல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் 2016 டி20 உலகக்கோப்பையில் அவர் ஹாங் காங் அணிக்காக களமிறங்கினார் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது.

சனத் ஜெயசூரியா – 2012 டி20 உலகக்கோப்பை

சனத் ஜெயசூரியா, இலங்கை அணியின் தலைசிறந்த கிரிக்கட்டர்களில் ஒருவர். அதிரடி ஆல்ரவுண்டரான ஜெயசூரியா 2012 டி20 உலகக்கோப்பையில் கலந்து கொண்டார். அப்போது அவரது வயது 40+ ஆகும். அவரால் அத்தோடரில் சரியாக ஆட முடியவில்லை. 6 இன்னிங்சில் வெறும் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

பிராட் ஹாக் – 2010 & 2012 டி20 உலகக்கோப்பை

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் 40 வயதுக்கு பிறகு இரண்டு முறை டி20 உலகக்கோப்பைகளில் விளையாடினார். அவை 2010 மற்றும் 2012 தொடர்கள் ஆகும். 2010ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆண்ட பரம்பரையாக விளங்கும் ஆஸ்திரேலியா, இன்னும் தங்கள் முதல் டி20 உலகக்கோப்பையை உயர்த்த காத்திருக்கிறது.

நஜீப் அமர் – 2014 டி20 உலகக்கோப்பை

இப்பட்டியலில் இருக்கும் கடைசி ஹாங் காங் வீரர் நஜீப் அமர். முனிர் தர்ரை போல இவரும் ஹாங் காங் நாட்டிற்காக 2014 டி20 உலகக்கோப்பையில் 40+ வயதோடு தான் ஆடினார்.

ரியான் டென் டோஸ்சேட் – 2021 டி20 உலகக்கோப்பை

டச் கிரிக்கெட் வீரர், ரியான் டென் டோஸ்சேட் மிகவும் பிரபலமான வீரர். ஐ.பி.எலில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 40+ வயதான இந்த ஆல்ரவுண்டர், நடப்பு 2021 டி20 உலகக் கோப்பையில் சிறப்பிக்கத் தவறினார். அவரது அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.