நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க வாய்ப்புள்ள ஏழு 2021 ஐ.பி.எல் நட்சத்திர வீரர்கள்

0
250
Umran Malik and Ruturaj Gaikwad

2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. எப்போதும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தும். அதே போல் இம்முறையும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட தவறியது.

டி20 உலகக்கோப்பை முடிந்ததும், நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் ஆடவுள்ளது. அதற்கான நியூசிலாந்து அணியை அந்நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய அணியைப் பற்றி வருகின்ற செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 9 ) பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பல மாதங்களாக சீனியர் வீரர்கள் தொடர்ந்து ‘ பையோ பபுலில் ‘ தங்கி இருந்து ஆடுகின்றனர். ஆகையால் இம்முறை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆகையால் 2021 ஐ.பி.எல் தொடரில் சிறப்பித்த 4 – 5 இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவுள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் நியூசிலாந்து தொடரில் களமிறங்கவுள்ள 7 நட்சத்திர வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

ருத்துராஜ் கெய்க்வாட்

2021 ஐ.பி.எலில் ஓப்பனர் கெய்க்வாட் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்றார். மேலும், 2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் ‘ எமர்ஜிங் பிளேயர் ‘ விருதையும் வென்றார். நடப்பு சையத் முஸ்டக் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் விளாசி அசத்தி வருகிறார். ருத்துராஜ் கெய்க்வாட், ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகிவிட்டார். ஆனால் அதில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அதிரடியான ஃபார்மில் இருக்கும் அவருக்கு இம்முறை வாய்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்.

வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணி, முதல் ஐ.பி.எல் பாதியில் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில், வெங்கடேஷ் ஐயரின் வருகைக்குப் பிறகு, அதிரடியாக ஆடி இறுதிப் போட்டி வரை முன்னேறி அமர்களப்படுத்தியது. இடது கை அதிரடி பேட்ஸ்மேனான வெங்கடேஷ் ஐயர், மீடியம் பேஸராகவும் செயல்படுகிறார். ஒருவேளை ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், வெங்கடேஷை முயற்சிக்கலாம்.

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர்

டெல்லி கேபிட்டல்ஸின் முன்னாள் கேப்டன், ஷ்ரேயாஸ் ஐயர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஏற்ப்பட்ட காயம் அவரின் கேப்டன் பதவியையும் இந்திய அணியில் அவரின் இடத்தையும் காவு வாங்கியது என்றே சொல்லலாம். டி20 உலகக்கோப்பை அணியிலும் அவர் ரிசர்வ் வீரராகவே சேர்க்கப்பட்டுள்ளார். ஆதலால் நியூசிலாந்து தொடரில் அவரின் ஆட்டத்தைக் காண வாய்ப்புள்ளது.

யுஸ்வேந்திர சாஹல்

யுஏஇயில் நடந்த இரண்டாம் பாதி ஐ.பி.எலில் சாஹல் மிகச் சிறப்பாக பந்திவீசினார். ஆனாலும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரை பிசிசிஐ சேர்க்கவில்லை. அது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து வரும் நியூசிலாந்து டி20 தொடரில் மீண்டும் சாஹல் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்ஷல் பட்டேல்

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில், 32 விக்கெட்டுகள் எடுத்து பர்புல் கேப்பை கைப்பற்றினார், ஹர்ஷல் பட்டேல். மேலும், ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக டெத் ஓவர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இவருக்கு இடம் கிடைக்கும்.

தீபக் சாஹர்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு விக்கெட் டேக்கர், சென்னை சூப்பர் கிங்ஸின் தீபக் சாஹர். இவர் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசி ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டவர். ஏற்கனவே தீபக், இந்திய அணிக்காக களமிறங்கி விக்கெட்டுகள் வீழ்தியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரைப் போல இவரும் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இணைந்துள்ளார். புவனேஷ்வர், பும்ராவுக்கு பதிலாக இவர் சிறந்த தேர்வாக இருப்பார்.

உம்ரான் மாலிக்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், நியூசிலாந்து தொடரில் களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இவரது வேகம் தான் பிளஸ் பாய்ண்ட். மிக எளிதாக 150+ பந்துகள் வீசுகிறார். ஒருவேளை நியூசிலாந்து தொடரில் இவருக்கு வாய்ப்புக் கிடைத்து அற்புதமாக செயல்பட்டால், இந்திய வேகப்பந்து துறையின் முக்கிய அங்கமாக கருதப்படுவார்.