டாப் 10

தங்களது கடைசி டி20 ஆட்டத்தை டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடிய ஏழு இந்திய வீரர்கள்

டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் சிறப்பாக தங்களின் வீரர்களை தயார் செய்து வருகின்றனர். வீரர்களும் தங்களது பெயரை உலக அரங்கில் பதிய வைக்க நன்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதன் முதலில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. அதன் பிறகு பாகிஸ்தான் இங்கிலாந்து இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் என நான்கு அணிகள் கோப்பையை கைப்பற்றியது. இதில் மேற்கிந்திய தீவுகளில் மட்டுமே இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. பலரின் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்து வந்த இந்த உலகக் கோப்பை தொடர் இன்னும் சிலரின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியாக அமைந்துள்ளது. அப்படி உலகக்கோப்பை தொடருடன் தங்களின் சர்வதேச டி20 ஆட்டங்களுக்கு முடிவுரை எழுதிய ஏழு வீரர்களைக் காண்போம்.

- Advertisement -

வீரேந்திர சேவாக்

கடந்த 2012ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் சேவாக் தனது கடைசி டி20 ஆட்டத்தை விளையாடினார். 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த அவர் அந்த ஆட்டத்தில் ராபின் பீட்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஜோகிந்தர் சர்மா

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்காக கடைசி ஓவரை வெற்றி பெற வைத்தவர் ஜோகிந்தர் சர்மா. அந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களில் ஆடிய இவர் அதன் பிறகு எந்த சர்வதேச டி20 தொடரிலும் விளையாடவில்லை.

ஆர்.பி.சிங்

இதேபோன்று 2007 ஆம் ஆண்டு தொடரில் இடம் பெற்ற மற்றொரு வீரர் ஆர்.பி.சிங். இவர் அடுத்து நடந்த உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்றார். 2009ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ஆடிய ஆட்டமே இவரது கடைசி ஆட்டம்.

- Advertisement -

அஜித் அகர்கர்

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான இவர் கடந்த 2007ம் ஆண்டு நடந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசியாக பங்கேற்றார். அந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியுற்ற ஒரே போட்டி இதுவாகும்.

லட்சுமிபதி பாலாஜி

இந்த வரிசையில் இருக்கும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி. 2012ஆம் ஆண்டு நடந்த தொடரின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய ஆட்டம் தான் இவரது கடைசி டி20 ஆட்டம்.

ஜாகீர் கான்

2000களில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான். இவரும் பாலாஜியை போகாதே 2012 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியை ஆடினார்.

இர்பான் பதான்

2007ம் நடந்த இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றவர் இர்பான் பதான். இவரும் 2012 தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு டி20 அணிக்கு திரும்பவில்லை.

Published by