வறுமையை எதிர்த்துப் போராடி இந்திய அணிக்குள் நுழைந்த 7 கிரிக்கெட் வீரர்கள்

0
510
Natarajan in Indian Crick
இந்திய நாடு அமெரிக்காவைப் போல வல்லரசான நாடு அல்ல. அப்படிப்பட்ட நம் இந்திய நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
ஒரு சில இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தால் கூடப் பரவாயில்லை, திறமை இருந்தால் தேசிய அணிக்காக விளையாடலாம் என்பதைப் பல கிரிக்கெட் வீரர்கள் நிரூபித்து விட்டனர். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து, உலகமே போற்றும் கிரிக்கெட் வீரராக வளர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.
வறுமையை எதிர்த்துப் போராடி இந்திய அணிக்குள் நுழைந்த 7 கிரிக்கெட் வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. பிரித்வி ஷா: 
இந்திய U-19 கிரிக்கெட் அணியின் நாயகன் பிரித்வி ஷா. கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, இளமையான வயதில் சதம் (டெஸ்ட் கிரிக்கெட்) அடித்த வீரர் இவர் தான். இன்று U-19 அணியின் தலைவராக இருக்கும் பிரித்வி ஷா, அவர் கடந்து வந்த பாதையில் பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளர.
மும்பை நகரைச் சேர்ந்த இந்த இளம் வீரர், தன்னுடைய 4ஆம் வயதிலேயே தாயை இழந்து விட்டார். பிரித்வி ஷாவின் கிரிக்கெட் பயிற்சிக்காக அவரது தந்தை தினமும் 70 கிலோமீட்டர் பயணம் செய்தார். எப்படியாவது தன் மகனைப் பெரிய இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்பட்டார். அவரது கனவும் நனவானது.
2. ரவிந்திர ஜடேஜா:
இன்று உலகிலேயே மிகச் சிறந்த பீல்டர் ரவிந்திர ஜடேஜா. இவர் கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துப் பிரவுகளிலும் அற்புதமாகச் செயல்படக் கூடிய ஒரு வீரர் ஆவார். இவரும் பலக் குடும்பக் கஷ்டங்களைத் தாண்டி தான் இன்று இந்திய அணியில் விளையாடுகிறார்.
ஜடேஜாவின் தந்தை வீட்டுக் காவல்காரர். சிறு வயதிலேயே இவர் தாயை பறிகொடுத்து விட்டார். இருப்பினும் விடா முயற்சியோடு விளையாடிய ஜடேஜா, 2008ஆம் ஆண்டு ஐசிசி U-19 உலக கோப்பையை வென்றார்.
3. மகேந்திர சிங் தோனி:
ஐசிசி டி20 மற்றும் ஐசிசி ஒரு நாள் கோப்பை ஆகிய இரண்டையும் வென்ற முதல் மற்றும் ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும் இவரது கனவு வானத்தைப் போல பறந்து விரிந்தது.
குடும்பத்தில் பணக் கஷ்டம் இருந்ததால், வீட்டில் இவரை வேலைக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால் தோனியும் ரயில் நிலையத்தில் டிக்கெட்ச் சரிபார்க்கும் வேலையில் சேர்த்துக் குடும்பத்திற்காக உழைத்தார். ஆனாலும் கூட, கிரிக்கெட்டின் மீது உள்ள அவருடையக் காதல் சிறிதளவும் குறையவில்லை. இன்று உலகமே போற்றும் மகத்தான கிரிக்கெட் வீரராக தோனி உள்ளார்.
4. புவனேஷ்வர் குமார்:
இந்தியக் கிரிக்கெட்டர் புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுக வீரராக களம் இறங்கினார். தான் வீசிய முதல் பந்திலயே விக்கெட் எடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் அடித்தளம் அமைத்தார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, இவர் ஐ.பி.எலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுவார். ஸ்விங் பௌலிங்கின் மன்னன் எனப் போற்றப்படும் புவனேஷ்வர், இளமைக் காலத்தில் பயிற்சி பெறும் போது காலில் சரியான செருப்பு கூட இல்லாமல் கஷ்டப்பட்டார்.
5. ரோஹித் ஷர்மா:
இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவும், வறுமையின் பிடியில் இருந்து மீண்ட வந்துச் சாதித்த ஒரு மஹான். ஐ.பி.எலில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்ற ஒரே வீரர் ரோஹித் ஷர்மா தான்.
ரோஹித் சர்மாவின் பெற்றோரால் அவரின் பள்ளிக் கட்டணத்தைக் கூடச் செலுத்த இயலவில்லை. இருப்பினும் ரோஹித்தின் கிரிக்கெட் ஆசைக்கு இணங்க அவரது பெற்றோர் தொடர்ந்து அவருக்குப் பக்க பாலமாக இருந்தனர். இன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரரும் இவரும் தான்.
6. பாண்டிய சகோதரர்கள்:
இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் குருனால் பாண்டியா ஐ.பி.எலில் மும்பை அணிக்காக தங்களுடைய சிறப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். இருவரும் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்றுவிட்டார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா மட்டுமே தொடர்ந்து இந்திய அணிக்கு விளையாடுகிறார்.
இந்த இரு சகோதரர்களும் அவர்களுடைய இளமைப் பருவத்தில் வெறும் ‘ மேகி நூடுல்ஸ் ‘ மட்டுமே உண்டு நாட்களைக் கடத்தினர். குருனால் பண்டியாவும் தற்போது நல்ல ஆல்ரவுண்டராக வளர்ந்து வருகிறார்.
7. தங்கராசு நடராஜன்:
இன்று அனைவரும் கொண்டாடும் ‘ யார்க்கர் கிங் ‘ ஆக வளர்ந்து உள்ள நம் நடராஜன் , ஆரம்பத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களில் ஒருவராக இருந்தவரே ! நடராஜனின் பெற்றோரால் போதுமான வசதிகளை அவருக்கு ஏற்படுத்தித் முடியவில்லை . நடராஜனின் நண்பர் ஜெயப்பிரகாஷ் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவரைக் கல்லூரியில் படிக்க வைத்து, கிரிக்கெட் விளையாட்டுச் செலவுகள் அனைத்தயும் ஏற்று இறுதிவரை துணை இருந்தார்.
நமது நடராஜன் பலத் துன்பங்களைக் கடந்து ஐ.பி.எலில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கும் தேர்வானார். இந்திய அணியிலும் துல்லியமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது.