69/6.. பங்களாதேஷின் வரலாற்று வெற்றியை தடுத்து நிறுத்திய பிலிப்ஸ் சான்ட்னர்!

0
333
Phillips

பங்களாதேஷ் நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

நியூசிலாந்தின் இந்தச் சுற்றுப்பயணத்தில் சியல்கட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மிர்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு அதிக அளவில் சாதகமாக இருந்தது.

முதலில் டால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் இதன் காரணமாக பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் தரப்பில் ரகிம் 35 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து தரப்பில் கிளன் பிலிப்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பங்களாதேஷ் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 97 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், பந்துவீச்சில் கலக்கிய கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 72 பந்துகளில் 87 ரன்கள் அடிக்க நியூசிலாந்து 180 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து எட்டு ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் தரப்பில் ஜாகிர் ஹசன் 59 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி 69 ரன்கள் எடுக்கும் பொழுது ஆறு விக்கட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் சிக்கியது. நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடர் வரலாற்று வெற்றியைப் பெறுகின்ற நிலைக்கு பங்களாதேஷ் வந்தது.

இந்த நிலையில் முதல் இன்னிங்சில் காப்பாற்றிய கிளன் பிலிப்ஸ் மிட்சல் சான்ட்னர் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக அணியை மீட்க ஆரம்பித்தார்.

இறுதியாக ஆட்டம் இழக்காமல் கிளன் பிலிப்ஸ் 48 பந்தில் 40 ரன்கள், மிட்சல் சான்ட்னர் 39 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமம் செய்தது. வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை பெற முடியாமல் பங்களாதேஷ் ஏமாந்தது.

இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கிளன் பிலிப்ஸ் மிகச்சிறப்பாக செயல்பட்டதே நியூசிலாந்து அணியின் வெற்றிக்கும், பங்களாதேஷ் அணியின் ஏமாற்றத்திற்கும் முக்கிய காரணம்!