எதிர்பாராத விதமாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைந்த 6 கிரிக்கெட் சம்பவங்கள்

0
3809
Sachin Tendulkar Test

கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் எந்த நேரத்தில் எந்த மாதிரியான விஷயம் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியாது. ஒரு போட்டி எப்படி ஆரம்பிக்கப்படும் என்றும் அது எப்படி முடியும் என்றும் யாராலும் தடுத்து விடமுடியாது. அப்படி கிரிக்கெட் வரலாற்றில் ஆச்சரியப்படும் அளவுக்கு அதே சமயம் நம்ப முடியாத அளவுக்கு நடந்த விஷயங்களை பற்றி பார்ப்போம்

1. சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா அடித்த இரட்டை சதங்கள்

- Advertisement -

2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். அதற்கு அடுத்தபடியாக 2011ம் ஆண்டு விரேந்திர சேவாக் ஒருநாள் போட்டியில் தன்னுடைய இரட்டை சதத்தை அடித்தார். அதன் பின்னர் மூன்றாவது இந்திய வீரராக ரோகித் சர்மா 2014 ஆம் ஆண்டு தன்னுடைய இரட்டை சதத்தை அடித்தார்.

இதில் ஒரு ஆச்சரியமான செய்தி என்றால் இவர்கள் மூவரும் இரட்டை சதமடித்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதிலும் மிக குறிப்பாக பார்க்க கூடிய ஒரு விஷயம், இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தான். இந்த நம்பர்கள் அனைவரையும் தற்போதுவரை ஆச்சரியப்படுத்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

2. மகேந்திர சிங் தோனி அடித்த 148

Dhoni First Century

மகேந்திர சிங் தோனி தனது முதல் ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்தார். 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை அடித்தார். அந்தப் போட்டியில் அவர் அடித்த ரன்கள் 148.

- Advertisement -

ஆச்சரியப்படும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி அடித்தார். பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத் மைதானத்தில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அந்தப் போட்டியில் அடுத்த ரன்களும் 148 தான். சொல்லி அடித்ததுபோல் இரண்டு முதல் சதங்கள்(148), அதுவும் அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமைந்தது.

3. டென்னிஸ் லில்லி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்த 300 டெஸ்ட் விக்கெட்டுகள்

டெனிஸ் லில்லி விளையாடிய காலத்தில் மிக அதிவேகத்தில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர் அவர் தான். அந்த சாதனையை அவர் நவம்பர் 27ஆம் தேதி 1981ம் வருடம் நிகழ்த்தி காட்டினார். அவருடைய சாதனையை பின்னாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 300 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 54 டெஸ்ட் போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியது அதே நவம்பர் 27ஆம் தேதி அன்று தான். ரவிச்சந்திரன் அஸ்வின் நவம்பர் 27ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் இருவரும் தங்களது 300வது டெஸ்ட் விக்கெட்டை ஒரே நாளில் கைப்பற்றியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

4. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

RCB Highest Score


2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புனே அணிக்கு எதிராக 263 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து அணியாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிலிருந்து வலம் வந்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அதே ஏப்ரல் 23ம் தேதி அன்று கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அதனை தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஐபிஎல் தொடரிலேயே மிகக்குறைவான ரன்கள் அடித்த அணி என்ற அணை என்றால் அதுவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தான்.

எனவே அதிக ரன்களை அடித்து அணியாகவும் அதேசமயம் குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது திகழ்ந்து வருகிறது. அந்த இரண்டு சம்பவங்களும் நடந்தது ஒரே நாளான ஏப்ரல் 23-ம் தேதிதான்.

4. அலெஸ்டர் குக் + மைக்கல் கிளார்க் = சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையில் 51 சதங்கள் உட்பட மொத்தம் 15,921 ரன்கள் அடித்துள்ளார். 2013 டிசம்பரில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். அதன்பின், பெர்த்தில் நடந்த ஆஷஸ் போட்டியில் விசித்திரமான ஒரு தற்செயல் நடந்தது.

இந்த பெர்த் டெஸ்ட்டில் மைக்கல் கிளார்க் மற்றும் அலெஸ்டர் தங்களது 100வது டெஸ்ட் போட்டியை ஆடினார்கள். போட்டி முடிவில், குக் 7955 ரன்கள் அடித்தார். அதில் 25 சதங்களும் அடங்கும். மைக்கல் கிளார்க், 15,919 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் மொத்தம் 26 டெஸ்ட் சதம் விளாசி இருந்தார்.

இரண்டு பேர் அடித்த டெஸ்ட் ரன்கள் மட்டும் சதங்கள் இரண்டையும் கூட்டினால், சச்சின் அடித்த டெஸ்ட் ரன்கள் & சதங்கள் வரும்.

6. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்

முதல் டெஸ்ட் போட்டி 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இதையடுத்து நூறு ஆண்டுகள் கழித்து 1977ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. ஆச்சரியப்படும் விதமாக நூற்றாண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இது இரண்டு அணிகளுக்கு எதிராக அமைந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் ஒரு ஆச்சரியமாக அந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இறுதியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரையும் மேலும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.