டெஸ்டில் சிறப்பாக செயல்படத் தவறிய 6 சிறந்த ஒடிஐ வீரர்கள்

0
2156
Yuvraj Singh and Andrew Symonds

கிரிக்கெட்டின் மிக முக்கியமான பார்மட் டெஸ்ட் கிரிக்கெட். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடப்பட்டு வரும் இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பது தான் பல வீரர்கள் தங்களின் பிரதான இலக்காக வைத்து உள்ளனர். பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் என்னதான் ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது எங்களுக்கு விருப்பம் என்று பலமுறை கூறியுள்ளனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதாக சிறப்பாக விளையாடி விட முடியாது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாதமாக விளையாட முடியாமல் போனவர்கள் பலர். அப்படிப்பட்ட ஆறு முக்கிய வீரர்களை இங்கு பார்ப்போம்.

யுவராஜ் சிங்

இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவரின் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறமையால் இந்திய அணிக்கு இரண்டு முக்கிய உலகக் கோப்பைகள் கிடைத்தன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஜாம்பவானாக வலம் வந்த யுவராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வந்தார். பல வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டாலும் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசிவரை ஏற்படுத்தவே முடியவில்லை.

இயான் மார்கன்

இங்கிலாந்து அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கான கேப்டன் இயான் மார்கன். பல ஆண்டுகளாக கனவாகவே இருந்த உலகக்கோப்பையை இங்கிலாந்து அணிக்கு முதன்முதலாக விட்டுக்கொடுத்த கேப்டன் மார்கன் தான். ஆனால் அவரால் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட முடியவில்லை. 16 ஆட்டங்களில் ஆடி வெறும் 700 ரன்களே எடுத்துள்ளார் மார்கன்.

மார்ட்டின் கப்தில்

நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்தில். 2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இவர் அடித்த இரட்டை சதம் பலருக்கு ஞாபகம் இருக்கும். மேலும் சில நாட்கள் முன்பு வரை இவர்தான் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர். ஆனால் அப்படி இருந்தும் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாத காரணத்தினால் நியூசிலாந்து அணி இவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாட விடவில்லை. அதனால் தனது முழு கவனத்தையும் தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பக்கம் திருப்பி விட்டார் கப்தில்.

லான்ஸ் குளூஸ்னர்

ஒரு காலத்தில் இந்த பெயரை கேட்டாலே பல முன்னணி பந்துவீச்சாளர்கள் அஞ்சி நடுங்குவர். இவரது அதிரடி ஆட்டத்துக்கு முன்பு எடுபடாமல் போன பந்து வீச்சுகள் எத்தனையோ இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்றவர் இந்த குளூஸ்னர். ஆனால் எவராலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போனது. 49 போட்டிகளில் விளையாடி 1906 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு அமைந்த சிறப்பான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் சைமன்ட்ஸ். அணியின் தேவைக்கு ஏற்ப மெதுவாகவும் அதே நேரத்தில் அதிரடியாக ஆடக்கூடிய அற்புதத் திறன் படைத்தவர் இவர். அதோடு இல்லாமல் இவ்வளவு தூரம் இருந்தாலும் சிறப்பாக ரன் அவுட் செய்வதும் இவருக்கு கை வந்த கலை. அதோடு சேர்த்து தேவையான நேரத்தில் விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுப்பவர். இத்தனை திறமைகள் இருந்தாலும் அத்தனையையும் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவர பயன்படுத்த முடியாமல் கடைசியில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

மைக்கேல் பெவன்

ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் வருகைக்கு முன்பே பினிஷர் என்னும் பட்டத்தை வைத்திருந்தவர் மைக்கேல் பெவன். பல சிக்கலான நாடகங்களையும் கடைசி வரை களத்தில் நின்று வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தவர் இவர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் தூணாக கருதப்பட்டவர் பெவன். ஆனாலும் இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியாமல் மிக குறைவான டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார்.