தோனிக்கு முன் அறிமுகமாகி தற்போது நடக்கும் 2021 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 6 வீரர்கள்

0
354
Dwayne Bravo and Mohammad Hafeez

எம்.எஸ்.தோனி, இந்திய கிரிக்கெட்டின் அம்பாஸ்டர். 2003ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தல தோனி அறிமுகமாகினார். அதன் பிறகு நடந்தவை எல்லாம் வரலாற்றில் இடம்பெற்றன. பல எதிர்ப்புகளையும் தாண்டி 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றார். பின்னர், 27 வருடத்திற்கு பிறகு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வாங்கித் தந்தார். அதோடு நிறுத்தாமல் 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

கேப்டனாக மட்டுமல்லாமல் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்கு பங்களித்துள்ளார். 2007 முதல் 2016 வரை நடந்த அனைத்து டி20 உலகக்கோப்பையிலும் தோனி ஆடினார். 2020 ஆகஸ்ட் 15, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனிக்கு முன் அறிமுகமான பல வீரர்கள் 2021 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கின்றனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

கிறிஸ் கெயில் : அறிமுகப் போட்டி – செப்டம்பர் 1999

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஒப்பனர் கெயில், 1999ம் ஆண்டு ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார். கெயில், டி20யின் ஜாம்பவான் வீரர். ஏற்கனவே அவர் 45 வயது வரை ஆடுவதாக அறிவித்தார், ஆனால் அவரது ஃபார்ம் முன்னது போல் இல்லாததால் இது தான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

முஹம்மது ஹபீஸ் : அறிமுகப் போட்டி – ஏப்ரல் 2003

டி20 போட்டி அறிமுகமானதில் இருந்து தற்போது பாகிஸ்தானுக்காக ஹபீஸ் விளையாடி வருகிறார். இத்தொடரில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பார்ட்டைம் ஸ்பின்னராகவும் பங்களிக்கிறார். இவருக்கும் இது தான் கடைசி டி20 உலகக்கோப்பை.

சோயப் மாலிக் : அறிமுகப் போட்டி – அக்டோபர் 1999

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு பாகிஸ்தான் வீரர், சோயப் மாலிக். டி20 உலகக்கோப்பைக்கு அறிவித்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் இவர் இடம்பெறவில்லை. சோயப் மக்ஸுட்டு காயம் காரணமாக வெளியேற, மாலிக் அவ்விடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

டுவெய்ன் பிராவோ : அறிமுகப் போட்டி – ஏப்ரல் 2004

தோனிக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரபல வீரர்களில் டுவெய்ன் பிராவோவும் ஒருவர். ஐ.பி.எலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருவரும் ஒன்றாக ஆடினர். அவர்களுக்கிடையே சிறந்த நட்பு உள்ளது. நடுவில் ஒரு சில வருடங்கள் பிராவோ, சர்வதேச கிரிக்கெட் ஆடவில்லை. தற்போது மீண்டும் சிறப்பாக ஆடி அணிக்குள் நுழைந்துள்ளார். 2021 டி20 உலகக்கோப்பை தான் அவருக்கு கடைசி தொடர் என்று ஏற்கனவே அவர் அறிவித்துவிட்டார்.

ரவி ராம்பால் : அறிமுகப் போட்டி – நவம்பர் 2003

எம்.எஸ்.தோனி தனது முதல் சர்வதேச போட்டியை ஆடுவதற்கு ஒரு மாதம் முன்னர் தான் ரவி ராம்பால் அறிமுகமாகினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி தேசிய அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ளார். அவரது பந்துவீச்சும் அனுபவமும் நிச்சயம் மேற்கிந்திய தீவுகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.

கைல் கோட்சர் : அறிமுகப் போட்டி – செப்டம்பர் 2003

60+ ஓடிஐ, 50+ டி20ஐயில் கலந்து கொண்ட கோட்சர், ஸ்காட்லாந்து அணியின் முக்கிய வீரராக கருதப்படுகிறார். இவர் ஸ்காட்லாந்து அணியின் முன்னாள் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆச்சரியமான செய்து என்னவென்றால் இவர் எம்.எஸ்.தோனிக்கு முன்னர் அறிமுகமாகி தற்போது வரை ஆடிக்கொண்டுள்ளார்.