குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜேசன் ராயின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 6 வீரர்கள்

0
10661
Martin Guptill and Suresh Raina

2022 ஐ.பி.எல் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்து அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் விலகி உள்ளார். ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் ( பையோ பபுல் ) காரணமாக வெளியேறி இருப்பதாக ஜேசன் ராய் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்ய விரும்பி தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார். இப்போது திடீரென விலகியதால் மாற்று வீரருக்கான தேடலில் குஜராத் டைட்டன்ஸ் ஈடுபட்டுள்ளது. ஜேசன் ராயின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 5 வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

மார்ட்டின் கப்தில்

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த அதிரடி ஒப்பனர் மார்ட்டின் கப்தில் நிச்சயம் சரியான தேர்வாக இருப்பார். ஷுப்மன் கில்லுடன் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை இவரால் கொடுக்க முடியும். ஒருபக்கம் கில் நிதானமாக ஆடினால் மறுபக்கம் இவர் அதிரடி ஆட்டத்தைக் காட்டி அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் செல்லக் கூடிய திறன் கொண்டவர். மேலும் அதிக அனுபவம் உள்ள இவரை குஜராத் அணி வாங்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

பால் ஸ்டெர்லிங்

கடந்த ஆண்டு முதல் இப்போது வரை அபாரமான ஃபார்மில் உள்ள ஓர் வீரர் பால் ஸ்டெர்லிங். அயர்லாந்து அணியின் முதுகெலும்பாக இவர் திகழ்ந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீகில் கூட இவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகவில்லை. தற்போது அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ட்டின் கப்திலைப் போல இவரும் பவுண்டரி, சிக்ஸர்கள் அடிக்கக் கூடியதில் வல்லவர்.

சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கிய சுரேஷ் ரெய்னா இம்முறை நிர்வாகத்தால் தக்கவைத்துக் கொள்ளப்படவில்லை. ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. ஆனால் இப்போது மீண்டும் ஐ.பி.எல் தொடருக்குள் நுழைய அவருக்கு ஓர் வழி கிடைத்துள்ளது. அனுபவம் வாய்ந்த ரெய்னா நிச்சயம் குஜராத் அணிக்கு அமர்க்களமான தேர்வாக இருப்பார். ஏற்கனவே அவர் குஜராத் எனும் பெயர் கொண்ட அணியும் வழிநடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலின் முன்ரோ

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ. இவரும் தற்போது சுமாரான பார்மில் உள்ளார். இவரை வாங்குவதில் அணிக்கு கூடுதல் லாபமும் கிடைக்கும். ஒருவேளை மிடில் ஆர்டரில் ஆட வீரர் தேவைபட்டால் இவரை உபயோகப் படுத்தலாம். சமீபத்தில் நடைபெற்ற தொடர்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன் திறனை வெளிக்காட்டினார். மேலும் ஓரிரு ஓவர்களும் வீசுவார்.

- Advertisement -

டேவிட் மலான்

நீண்ட காலமாக டி20 தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக நீடித்துக் கொண்டிருந்த டேவிட் மலானை எந்த ஒரு ஐ.பி.எல் அணியும் வாங்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தொடக்க வீரராக மட்டுமில்லாமல் நம்பர் 3ல் களமிறங்கி அணிக்கு பங்களிப்பார். சஹா அல்லது மாத்யூ வேட் ஒப்பனிங் ஆடினால் இவர் அடுத்த வீரராக இறங்கி போட்டியின் தன்மைக்கேற்ப அணிக்கு தேவையான ரன்களை அடித்துக் கொடுப்பார்.

டேவிட் வீஸ்

இந்த அதிரடி ஆல்ரவுண்டரின் அணியில் சேர்ப்பதன் மூலம் பிளேயிங் லெவன் வலிமையாக காணப்படும். கடைசி ஒருசில ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி எதிரணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க இவர் உதவுவார். அதற்கு மாத்யூ வேட் அல்லது டேவிட் மில்லரை பறிகொடுக்க நேரிடும். இந்த விஷயத்தில் குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் சரியான முடிவை சற்று யோசித்து தான் எடுக்க வேண்டும்.