வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய 6 வீரர்கள்

0
360
Andrew Symonds Bowling

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்து வீச்சு என்பது ஒரு அற்புதமான கலை ஆகும். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டு வகை உண்டு. வேகப்பந்து வீச்சை ஆயுதமாக எடுத்து பல பேட்டிங் வீரர்களின் தூக்கத்தை கெடுத்த வீரர்கள் எத்தனையோ பேர் கிரிக்கெட் அரங்கில் இருக்கின்றனர். கார்னர், ஹோல்டிங், லில்லி, தாம்சன், வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற எத்தனையோ வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி எண்ணற்ற விக்கெட்டுகளை குவித்துள்ளனர். அதே நேரத்தில் வார்னே, முரளிதரன், கும்ளே போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஆனால் ஒரே நேரத்தில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் திறம்பட செயலாற்றுவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியமே. ஆனால் அதையும் சாதித்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய 6 முக்கியமான வீரர்களை குறித்து இங்கு காண்போம்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் சைமண்ட்ஸ். அணிக்கு தேவையான நேரத்தில் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டையும் கலந்து வீசி பல விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அணிக்கு தந்துள்ளார். இரண்டு வகை பந்து வீச்சுக்கும் இவர் வலது கையைத்தான் பயன்படுத்தினார். மொத்தமாக இவர் 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

கேரி சோபர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்தவரான கேரி சோபர்ஸ் மூன்று வகையான வித்தியாசமான பந்துவீச்சுகளை தனது ஆட்ட நாட்களில் பயன்படுத்தியுள்ளார். இடது கையில் வேகப்பந்து வீச்சு, லெக்ஸ்பின் மற்றும் ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சு முறைகளை கையாண்டு 236 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டோனி கிரைக்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் பின்பு சிறந்த வர்ணனையாளருமான விளங்கிய டோனி கிரெய்க் வலது கையில் ஆப் ஸ்பின் மற்றும் மித வேகப்பந்து வீச்சு என இரண்டு வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்தி பந்து வீசினார். இவர் 80 சர்வதேச போட்டிகளில் 160 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பரஸ் கட்கா

பரஸ் கட்கா நேபாள அணிக்காக 17 விக்கெட்டுகளை நாற்பத்தி மூன்று போட்டிகளில் பெற்றுத் தந்துள்ளார். இவரும் டோனி கிரெய்க் போலவே வலது கையில் மித வேகப்பந்து வீச்சு மற்றும் ஆப் ஸ்பின் என இரண்டு முறையில் பந்து வீச கூடியவர்.

- Advertisement -

காலம் மெக்லாய்ட்

ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த காலம் மெக்லாய்டும் வலது கையில் மித வேகப்பந்து வீச்சு மற்றும் ஆப் ஸ்பின் என இரண்டும் வீச கூடியவர். இதுவரை 15 விக்கெட்டுகளை தனது அணிக்காக பெற்றுத் தந்துள்ளார். இவர் தற்போது உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்காக பங்கேற்று வருகிறார்.

சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவரான கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார். ஆனால் இவர் இரண்டு சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவரும் வலது கையை பயன்படுத்தி மித வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டையும் வீசக் கூடியவர்.