பாகிஸ்தான் மண்ணில் விளையாடியுள்ள 6 நடப்பு இந்திய வீரர்கள்

0
238
Robin Uthappa and Rohit Sharma

சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பாகிஸ்தான் அணி தன் கையை ஓங்குகிறது. ஐசிசி, 2025 சாம்பின்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் நிர்வாகத்திற்க்கு வாய்ப்பு அளித்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஐசிசி தொடர் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட கால பகை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்திய அணி பாகிஸ்தானுக்கும், அவர்கள் நம் நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்தி 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் அடுத்து நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு செல்வதில் பிசிசிஐக்கு எந்த ஆட்சியணனையும் இல்லை என்று தெரிவித்ததுவிட்டது. இக்கட்டுரையில், பாகிஸ்தான் மைதானத்தில் விளையாடியுள்ள 6 நடப்பு இந்திய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

ரோஹித் ஷர்மா

நடப்பு இந்திய டி20ஐ கேப்டன் ரோஹித் ஷர்மா, 2008 ஆசியக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணியில் ஒருவர். பாகிஸ்தான் நடத்திய அத்தொடரில் ரோஹித் ஷர்மா 6 போட்டியில் பங்கேற்றார். அதில் 72.5 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 29 சராசரியில் 116 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

ராபின் உத்தப்பா

இப்பட்டியலில் இருக்கும் அடுத்த வீரர் ‘ வாழ்க்கிங் ஆஸ்ஸாசின் ‘ என்றழைக்கப்படும் ராபின் உத்தப்பா. ரோஹித் ஷர்மாவைப் போல இவரும் 2008 ஆசியக் கோப்பையில் விளையாடினார். உத்தப்பா, 3 போட்டியில் 37 ரன்கள் மட்டுமே அடித்தார். அத்தொடரில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் ஷர்மா

அதிக அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும், அந்த ஆசியக் கோப்பையில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசி 5 போட்டியில் 6 விக்கெட்டுகள் கைபற்றி அசத்தினார். அதில் ஒரு 3 விக்கெட் ஹாலும் அடங்கும். இஷாந்த் ஷர்மா, 2016க்குப் பிறகு லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை.

பியூஷ் சாவ்லா

லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா, 2008 ஆசியக் கோப்பையில் மிக அற்புதமாக பந்துவீசினார். மூன்று போட்டியில் 5.12 எக்கனாமியில், 6 விக்கெட்டுகள் எடுத்தார். அத்தொடரில் அவருடைய சிறந்த பந்துவீச்சு 4/23 ஆகும். இவரும் தற்போதைய இந்திய அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

ஶ்ரீசாந்த்

வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் அணிக்கும் திரும்பும் நோக்கத்தில் இருந்தார். ஆனால் தற்போது அவர் அமெரிக்கா நாட்டிற்க்கு குடியேறி அந்த அணிக்காக விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னர் இந்திய அணிக்காக பாகிஸ்தான் மண்ணில் ஐந்து ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். அதில் ஒரு 4 விக்கெட் ஹால் மொத்தம் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஹர்பஜன் சிங்

இப்பட்டியலில் இருக்கும் கடைசி வீரர், ஹர்பஜன் சிங். பாகிஸ்தான் ஆடுகளங்ககில் 2 டெஸ்ட் போட்டியில் 38 ரன்கள் சேர்த்தார். ஆஃப் பிரேக் பவுலரான இவர் அவ்விரண்டு போட்டியில் எந்த வைக்கட்டையும் வீழ்த்தவில்லை. ஹர்பஜன் சிங்கும் நடப்பு இந்திய அணியில் இல்லை.