ஆறு கோடி ஒப்பந்தமே போதும் – விடாப்பிடியாக இருந்த தோனியின் மனதை மாற்றிய சென்னை நிர்வாகம்

0
441
MS Dhoni and CSK CEO

சிறிது நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை தாங்கள் தக்க வைத்து இருக்கிறோம் என்ற பட்டியலை வெளியிட்டது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் மிகவும் கவனத்தோடு வீரர்களை ஒவ்வொரு அணி நிர்வாகமும் தக்கவைத்துள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை அணி கடந்த தொடரில் விளையாடிய நான்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது. அந்த 4 வீரர்களின் விபரம் ஜடேஜா, தோனி, மொயின் அலி மற்றும் ருத்ராட்ஜ் கெய்க்வாட்.

டுப்லஸ்ஸிஸ் பிராவோ போன்ற வீரர்களை தக்க வைக்க முடியவில்லை என்றாலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு 4 வீரர்களை சென்னை அணி தக்கவைத்துள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு 16 கோடியும், இரண்டாவது வீரருக்கு 12 கோடியும், மூன்றாவது வீரருக்கு 8 கோடியும் மற்றும் நான்காவது வீரருக்கு 6 கோடியும் கிடைக்கும். இதுகுறித்து தற்போது பேசியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

பத்ரிநாத் பேசும்போது சென்னை அணியின் கேப்டன் தோனி தன்னை 4-வது வீரராக தக்கவைத்துக்கொள்ள கூறியதாகவும் சென்னை அணி நிர்வாகம் அப்படி செய்யாமல் அவரை இரண்டாவது வீரராக தக்க வைத்து உள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னை அணியின் சீனியர் நிர்வாகி சீனிவாசன் எந்த ஒரு நிலையிலும் தோனியை விட்டுக் கொடுக்காமல் 12 கோடி ரூபாய்க்கு தோனியை தக்கவைத்து உள்ளதாக கூறியுள்ளார். 4-வது வீரராக தோனி தக்க வைக்கப் பட்டிருந்தால் அவருக்கு ஆறு கோடி ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கும். தோனி அதற்கு விரும்பிய போதும் சென்னை அணி நிர்வாகம் தோனியை 4-வது வீரராக தக்க வைக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார் பத்ரிநாத்.

கடந்த 2020 தொடரில் சென்னை அணி மோசமாக விளையாடினாலும் அடுத்த தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. அடுத்த தொடரில் ஆடுவது குறித்து தோனி பேசும்போது எனது கடைசி ஆட்டம் சென்னை மைதானத்தில் தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் இறுதியாக ஒருமுறை சென்னை மைதானத்தில் துணியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.