கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

59 வருடம்.. 1036 போட்டிகள்.. இந்திய ODI கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. வித்தியாசமான சாதனை!

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்றுப்போட்டி இலங்கையில் தற்பொழுது நடந்து வருகிறது!

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தீர்மானித்தார். இந்திய அணியில் அக்சர், சர்துல் இடத்தில் இடம் பெற்றார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பவர் பிளேவை மிகச் சிறப்பாக பயன்படுத்தி ரன்கள் சேர்த்தார்கள். இந்த முறை கில் பொறுமைக்காட்ட ரோகித் சர்மா அதிரடியில் ஈடுபட்டார்.

இதற்கு அடுத்து ஆட்டத்தின் 11 வது ஓவரை இலங்கையின் 20 வயதான இடதுகை இளம் சுழற் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலையே கில் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு தொடர்ந்து விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா என ஐந்து இந்திய முக்கிய பேட்ஸ்மேன்களை அவர் வெளியேற்றினார். இதனால் இந்திய அணி பெரிய சரிவுக்கு உள்ளானது.

இதற்கு அடுத்து பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் அசலங்காவை இலங்கை கேப்டன் சனகா கொண்டு வந்தார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் அசலங்கா பந்துவீச்சு கூட முரளிதரன் பந்துவீச்சு போல இருந்தது. அவர் தன் பங்குக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்னொரு பக்கத்தில் அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளரான தீக்ஷனா விக்கெட்டுகள் எதுவும் இல்லாமல் இருந்தால். இந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் அக்சர் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி இதுவரை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 1974 ஆரம்பித்து விளையாடிய 1036 போட்டிகளில், முதல்முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்து இருக்கிறது. இந்த வகையில் இந்திய அணிக்கு இது மோசமான சாதனையாக அமைந்திருக்கிறது.

இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. வெல்லாலகே ஐந்து விக்கட்டுகளையும் அசலங்கா நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். தற்பொழுது இலங்கை அணி விளையாடி வருகிறது.

Published by