இந்திய டி20 அணிக்குள் வர வாய்ப்பு இருக்கும் 5 இந்திய இளம் வீரர்கள்!

0
833
Ict

கிரிக்கெட் மிக வேகமாக மாறி வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் டி20 கிரிக்கெட்டுக்கான வரவேற்பு ரசிகர்களிடையே அதிகப்படியாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் வேகமான கிரிக்கெட்டுக்கு தகுந்தவாறு தங்களைத் தயாரித்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இந்திய கிரிக்கெட் தற்காலத்திற்கு தேவையான மாற்றங்களுக்கு முதல் அடியை எடுத்து வைக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. அதன் ஆரம்ப வேலைகள் ஆரம்பித்து விட்டது என்று கூறலாம். இந்த வகையில் சீனியர் வீரர்களை தவிர்த்து டி20 கிரிக்கெட்டில் அதிரடியான இளம் வீரர்களை அறிமுகப்படுத்த பிசிசிஐ யோசிக்கிறது. இந்த வகையில் இந்திய டி20 அணியில் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கும் ஐந்து வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் :

மும்பை மாநில அடிக்காத விளையாடி வரும் இந்த இளம் இடது கை ஆட்டக்காரர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்கு விளையாடுகிறார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்தது, தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்தது என அமர்க்களப்படுத்தி, தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் இவர் இந்திய டி20 அணியில் அடுத்து வருகின்ற வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடரில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ரிங்கு சிங்:

- Advertisement -

உத்திர பிரதேச மாநில அணிக்காக விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடுகிறார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன்னுடைய அறிமுகத்தை சிறிது அளவில் காட்டினார். இந்த முறை ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் விளாசி, தான் யார் என்பதை முழுமையாக வெளிப்படுத்தி விட்டார். இந்த இளம் இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு இந்திய டி20 அணியில் வருகின்ற வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடரில் இடம் இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திலக் வர்மா :

உள்நாட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்த இளம் இடது கை ஆட்டக்காரரின் தனிச்சிறப்பு தைரியமாக விளையாடுவது மட்டும் இல்லாமல், பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் அதற்கேற்றவாறு விளையாடுகின்ற திறன் கொண்டவர். மேலும் ஆட்டத்தில் பொறுப்பை தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டு விளையாடும் குணம் படைத்தவர். கடந்த இரண்டு ஐபிஎல் சீசனிலும் இவரது சிறப்பான வெளிப்பாடுகள் காணக் கிடைக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இவரை சீக்கிரத்தில் இந்தியாவுக்காக எல்லா கிரிக்கெட் வடிவத்திலும் பார்க்கலாம் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிதேஷ் சர்மா ;

உள்நாட்டு கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக விளையாடுவோம் இந்த வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பேட்டிங்கில் மிடில் வரிசை அல்லது பினிஷிங் இடத்தில் மிகவும் அதிரடியாக விளையாடக் கூடியவர் அதே சமயத்தில் சரியான முறையில் விளையாடக்கூடியவர். இவரது இந்த திறமை சுரேஷ் ரெய்னா, ப்ரட் லீ போன்ற முன்னணி முன்னாள் வீரர்களைக் கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கும் வருகின்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்படுகிறது.

சாய் சுதர்சன்:

தமிழக அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி வரும் இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்த இடது கை இளம் பேட்ஸ்மேனை பொருத்தவரை எந்த கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் வாய்ப்பு கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு விளையாடுகின்ற திறமை இருக்கிறது. இவருக்கு இந்த நால்வரைத் தாண்டி முதலில் இந்திய டி20 அணியில் இடம் என்பது கடினம்தான். ஆனால் மற்றவர்கள் வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு அதிகபட்சம் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இவர் எப்படியும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது உறுதி!