2022 ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 5 விக்கெட் கீப்பர்கள்

0
634
Ishan Kishan and Johny Bairstow

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டது. பல நட்சத்திர வீரர்கள் நேரடியாக ஏலத்திற்கு வருவதால் 2022 மெகா ஏலம் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. டெல்லி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு கீப்பிங் செய்ய ஏற்கனவே தகுந்த வீரர்களை அந்நிர்வாகம் தக்கவைத்துக் கொண்டது. மீதமுள்ள அணிகள் சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஐ.பி.எல் தொடரைக் காட்டிலும் இம்முறை அதிக சம்பளம் பெற வாய்ப்புள்ள 5 விக்கெட் கீப்பர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

இஷான் கிஷான்

வெறும் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால், பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித், பும்ரா, சூரியகுமார் யாதவ் மற்றும் பொல்லார்டை வைத்துக் கொண்டது. ஆகையால் இளம் வீரர் இஷான் கிஷான், ஏலத்திற்கு வருவார். அதிரடி வீரர் கிஷான், 45 போட்டிகளில் 1133 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் இந்திய அணியிலும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டிப்போடுவர்.

- Advertisement -

குவிண்டன் டி காக்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு மும்பை இகுவிண்டன் டி காக குவிண்டன் டி காக். கடந்த மூன்று கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் கைப்பற்ற இவரும் அதிகம் பங்களித்துள்ளார். இந்த தென்னாபிரிக்க இடதுகை பேட்ஸ்மேன் இதுவரை ஐ.பி.எலில் 2256 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராகவும் அற்புதமாக செயல்பட்டுள்ளார். இவரும் அடுத்த ஆண்டு ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜானி பேர்ஸ்டோ

இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். சன்ரைசர்ஸ் நிர்வாகம், தங்களின் நட்சத்திர வீரர்களில் கேன் வில்லியம்சனை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு ரஷீத் கான், வார்னர், பேர்ஸ்டோ போன்ற வீரர்களை விடுவித்தது. பேர்ஸ்டோ போன்ற அதிரடி தொடக்க வீரர்களுக்கு மதிப்பு அதிகம். சென்ற ஆண்டை விட இம்முறை இவரின் சம்பளம் கூடுதலாக இருக்கும்.

கே.எஸ்.பரத்

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத், தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். விக்கெட் கீப்பிங்கிலும் துல்லியமாக செயல்பட்டுள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட்டில் சாஹாவுக்கு மாற்று வீரராக களமிறங்கி இரண்டு கேட்ச்களை பிடித்தார். பரத்தை தக்கவைத்துக் கொள்ளத் தவறிய பெங்களூர் நிர்வாகம், மீண்டும் அவரை ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஏலத்தில் குறைந்தது 5/6 கோடிக்கு வாங்கப்படுவார்.

- Advertisement -

டிம் செய்ப்ரெட்

கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இணைந்திருந்த செய்ப்ரெட்டுக்கு எவ்வித வாய்ப்பும் கிட்டவில்லை. சர்வதேச டி20யில் நியூசிலாந்து அணிக்காக 40 போட்டிகளில் 753 ரன்கள் அடித்துள்ளார். தொடக்க வீரரான செய்ப்ரெட், கரீபியன் பிரீமியர் லீகில் தன் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார். தகுந்த வாய்ப்பளித்தால் அதே போல் ஐ.பி.எலிலும் ஆடுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரை எந்த அணி எவ்வளவு தொகைக்கு வாங்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.