தமிழ்நாட்டில் பிறந்து வேறு நாட்டிற்காக விளையாடி வரும் 5 கிரிக்கெட் வீரர்கள்

0
2060
Karthik Meiyappan and Nivethan Radhakrishnan

தமிழ்நாடு அணி இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்படும் அணிகளுள் ஒன்றாகும். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரை வரிசையாக இரண்டாவது ஆண்டாக கைப்பற்றி சாதனை புரிந்தது. தமிழ்நாட்டை அணியில் சிறப்பாக செயல்பட்டு அதன்மூலம் பல வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி சாதித்துள்ளனர். இப்படி பல வீரர்கள் தமிழ்நாட்டு அறைக்குள் நுழைவதற்கு போட்டி போடுவதால் திறமை இருந்தும் சில வீரர்களுக்கு தமிழக அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்க படுவதில்லை. அதனால் வேறு நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்று அங்கு தமிழக வீரர்கள் சாதித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஐந்து முக்கியமான வீரர்களை கொடுத்து இங்கு காண்போம்.

செனுரன் முத்துசாமி

தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். இடது கை பேட்டிங் வீரரான இவர் இடது கையில் ஆர்தொடாக்ஸ் சுழற்பந்து வீச்சு வீசுவதிலும் வல்லவர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் அறிமுகமானார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்தினார். அதன்பிறகு தென்ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் 27 வயதான இவருக்கு நிச்சயம் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.

நிவேதன் ராதாகிருஷ்ணன்

ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் விளையாடி வரும் நிவேதன் ராதாகிருஷ்ணன் தற்போது வரை சீனியர் அனுப்பி விளையாடா விட்டாலும் விரைவில் அதையும் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் விளையாட இவருக்கு ஆஸ்திரேலிய அணி சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. TNPL தொடரில் விளையாடியுள்ள இவர் இரண்டு கைகளிலும் வந்து வீசுவதில் வல்லவர். ஆஸ்திரேலிய அணிக்கு விரைவில் தேர்வாக இது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சிவக்குமார் பெரியாழ்வார்

தமிழ்நாட்டில் பிறந்த இவர் ரோமானியா நாட்டிற்காக தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறார். சமீபத்தில் அந்த அணியின் டி20 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த போது இவர் சதம் அடித்திருந்தார். பொறியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினாலும் தற்போது ரோமானிய அணிக்காக விக்கெட் கீப்பிங் விளையாட்டு வீரராக அசத்திக் கொண்டிருக்கிறார்.

கார்த்திக் மெய்யப்பன்

சென்னையில் பிறந்த கார்த்திக் மெய்யப்பன் தற்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அந்த அணிக்காக தற்போது பங்கெடுத்து வருகிறார். இவரின் சிறப்பான பந்துவீச்சை பார்த்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இவரை வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக அளித்தது குறிப்பிடத்தக்கது.

வெங்கட்ராமன் கணேசன்

தமிழ் நாட்டைச் சேர்ந்தவரான இவர் தன்னுடைய சிறுவயதில் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது ஜெர்மனி அணிக்காக இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டர் ஆனால் இவர் ஜெர்மனி அணிக்கு கேப்டனாகவும் தற்போது உள்ளார். இவர் மட்டுமல்ல அது இந்தியாவை சேர்ந்த பலரும் ஜெர்மனி அணிக்காக தற்போது கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.