மெகா ஏலத்திற்கு முன் அனைவரும் ஆச்சரியப் படும் வகையில் தக்க வைத்துக் கொள்ளப்பட்ட 5 வீரர்கள்

0
441
Sarfaraz Khan and Axar Patel

இந்தியன் பிரீமியர் லீக்கில், மெகா ஏலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு தேவையான அணியை இந்த ஏலத்திலேயே அமைத்துக் கொள்வது அவசியம். ஆகையால் அணி உரிமையாளர்கள் அனைவரும் போட்டிப் போட்டிக் கொண்டு வீரர்களை வாங்குவர். ஐ.பி.எல் போட்டியைப் போல இதுவும் ரசிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன் அந்தந்த அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும்.

மேலும் இந்த ஏலத்தில் ஆர்.டி.எம் கார்டு இல்லை என்பதையும் பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதற்கு முன் 3 வீரர்கள் தக்க வைத்துக் கொள்வதோடு 2 ஆர்.டி.எம் கார்டுகளும் வவழங்கப்பட்டன. கலந்து கொள்ளும் அணிகள், தங்களின் 3 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொள்ள எண்ணுவர். ஆனால் ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை 5 விசித்திரமான ரிட்டன்ஷ்னகள் நடைபெற்றுள்ளன. அந்த 5 வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

ஷேன் வார்னே – ராஜஸ்தான் ராயல்ஸ்

2011ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை தக்கவைத்துக் கொள்ளும் போது அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்தனர். முதல் ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஷேன் வார்னே, 2011ஆம் ஆண்டில் கால் வைக்கும் போது அவரது வயது 40. இவரை ஏன் அதிகத் தொகைக்கு தக்க வைத்துக் கொண்டனர் என்பதே பெரும்பாலானோரின் கேள்வி. எனினும், அதற்கு அடுத்த ஆண்டே அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

மனன் வோரா – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2014 ஐ.பி.எல் சீசன் பஞ்சாப் அணிக்கு சிறப்பாக அமைந்தது. அவ்வருடம், மனன் வோரா எனும் தொடக்க வீரர் மீது அதிக நம்பிக்கை வைத்து அந்நிர்வாகம்bதக்க வைத்துக் கொண்டது. ஆனால் அது அவர்களுக்கு பயனுற்றதாக முடிவடைந்தது. எதிர்பார்த்த அளவிற்கு அவர் ஜொலிக்கவில்லை. இருப்பினும், மேக்ஸ்வெல்லின் அதிரடியால் முதல் முறையாக பஞ்சாப் அணி இறுதிப் போட்டிகுத் தகுதிப் பெற்றது.

ஜேம்ஸ் பாக்னர் – ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் பாக்னர், 2014ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பெரிய தொகைக்குத் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார். இவரின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் அளித்த தொகை நிச்சயம் அதிகம் என்று அனைவரும் கருதினர். ஜேம்ஸ் பாக்னர், ஒரு சில வருடங்கள் சிறப்பாக செயல்பட்டார். அதை அவரால் தொடர்ந்து செய்ய இயலாததால் எந்த அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

சர்பராஸ் கான் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐ.பி.எல் வரலாற்றிலேயே அனைவரையும் வியக்க வைத்த ரிட்டன்ஷனை பெங்களூர் அணி நிகழ்த்தியது. 2018ஆம் ஆண்டு மூன்றாவது வீரராக சர்பராஸ் கானை அவர்கள் தக்க வைத்துக் கொண்டனர். கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் & சாஹல் போன்ற முன்னணி வீரர்களை விட்டுவிட்டு இவரை அணியில் வைத்துக் கொண்யது ஆர்.சி.பி நிர்வாகம். அவர்களின் எதிர்பார்ப்பை சர்பராஸ் கானால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டே அவரை விடுவித்து விட்டனர்.

அக்ஷர் பட்டேல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்திற்கு முன்னர் பஞ்சாப் அணி அக்ஷர் பட்டேலை தக்க வைத்துக் கொண்டது. அவர் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக பங்களித்தார். ஆனாலும் ரீட்டெயின் செய்யப்படும் அளவிற்கு அவர் தகுதியானவர் இல்லை என்று சிலர் கருதினர். அவரின் ஆட்டம், பஞ்சாப் நிர்வாகத்தை திருப்பதிப் படுத்தாததால் அவரை விடுவித்தது. தற்போது அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.