பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக பவுலிங்கை கைவிட்ட 5 வீரர்கள்

0
3033
Sachin Tendulkar and Steve Smith

சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான வீரராக உயர்வது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அதற்கு வெறும் திறன் இருந்தால் போதாது. கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் தேவை. பேட்டிங்கோ பவுலிங்கோ ஃபீல்டிங்கோ, எதில் சாதிக்க வேண்டுமானாலும் பயிற்சி மிக முக்கியம். நிலையான கவனத்தோடு எது செய்தாலும் அது வெற்றியைத் தேடித் தரும்.

எந்த ஒரு அணிக்கும் ஆல்ரவுண்டர் நிச்சயம் தேவை. பேட்டிங் மற்றும் பவுலிங், இரண்டிலும் சிறப்பிக்க மற்றவர்களை விட அவர்கள் கூடுதலாக பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில வீரர்கள், ஒரு துறையில் சிறப்பிக்க மற்றொரு துறையை கைவிட்டுள்ளனர். இக்கட்டுரையில், பவுலிங்கை குறைத்து பேட்டிங்கில் அதிக கவனத்தைச் செலுத்திய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1.ஸ்டீவ் ஸ்மித்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித், ஒரு லெக் பிரேக் பவுலராக தான் அறிமுகமாகினார். ஐ.பி.எலில் கூட அவரது பந்துவீச்சுத் திறனைக் கருதியே வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அவர் 9வது வீரராக களமிறங்கினார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் வலம் வருகிறார். டெஸ்ட்டில் அவரது விக்கெட்டை வீழ்த்த பந்துவீச்சாளர்கள் தினறுவர். அனைவருக்கும் சிம்மசொப்பனமாக ஸ்மித் விளங்குகிறார்.

2.மார்க் ரிச்சர்ட்சன்

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட்சன், தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையை முழு நேர ஸ்பின்னராக தொடங்கினார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக ஆட ஆரம்பித்தது விட்டார். 38 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட மார்க் ரிச்சர்ட்சன், தொடக்க வீரராக மாறிய பிறகு வெறும் 66 பந்துகள் மட்டுமே வீசினார். பந்து வீசுவதை குறைத்துக் கொண்டார் என்பதை விட, நிறுத்திக் கொண்டார் என்று கூறலாம்.

3.சச்சின் டெண்டுல்கர்

சச்சினின் கிரிக்கெட் கரியரை நீங்கள் நன்கு கவனித்தால், அவரின் ஆரம்ப கால ஆட்டத்தில் பல விக்கெட்டுகள் அவரின் பெயருக்கு பின் இருக்கும். சொல்லப்போனால் சச்சின் வாங்கிய ஒரு சில ஆட்டநாயகன் விருதுகள் அவரின் பந்துவீச்சு பங்களிப்பை வைத்தே.. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 200+ விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இரண்டுமுறை 5- விக்கெட் ஹாலும் எடுத்துள்ளார். நாளடைவில் அவர் தன்னுடைய பவுலிங்கை குறைத்துக் கொண்டார். பேட்டிங்கில் பல உலக சாதனைகள் படைத்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் டெண்டுல்கர். அதனால் அவர் கிரிக்கெட் கடவுள் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

4.கேமரூன் ஒயிட்

இப்பட்டியலில் இருக்கும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் ஒயிட். இவரும் ஸ்டீவ் ஸ்மித்தைப் போலவே, ஒரு லெக் ஸ்பின்னராக அறிமுகமாகினார். ஆஸ்திரேலிய நிர்வாகம் இவரை பந்துவீச்சு அடிப்படையில் தான் தேர்வு செய்தது.

அணியில் இணைந்த பிறகு பந்துவீச்சை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு, ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் அவர் பேட்டிங் செய்யத் தொடங்கினார் ஒயிட். பிக் பேஷ் லீக்கில் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக கேமரூன் ஒயிட் திகழ்கிறார். ஐ.பி.எலில் இவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5.நாசர் ஹுசைன்

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மற்றும் பிரபல வர்னையாளரான நாசர் ஹுசைன், சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு லெக் பிரேக் பவுலராக களமிறங்கினார். அதன் பிறகு, பவுலிங்கில் நேரத்தைக் குறைத்துக் கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கினார். இவர் இங்கிலாந்திற்கு 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் இங்கிலாந்து அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்களில் ஒருவராக நாசர் ஹுசைன் உயர்ந்தார்.