இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியும் பலருக்கும் அவ்வளவாக தெரியாத 5 வீரர்கள்

0
922
Gurkeerat Singh and Sreenath Aravind

இந்திய அணி பேட்டிங் வீரர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் அணி. முகப்பை போன்ற தொடர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும் என்பதால் அதிகமாக எந்த ஒரு அணியும் பைலேட்டிரல் சீரிஸ் என்று சொல்லப்படும் இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை தான் அதிகமாக விளையாடும். அப்படி ஒரு வருடத்தில் பல போட்டிகள் நடைபெற்றால் ஒரு சில முக்கிய வீரர்கள் ஓய்வு எடுப்பதற்காக சில ஆட்டங்களில் இருந்து விலகிக் கொள்வர். அந்த முன்னணி வீரர்களுக்கு பதிலாக அப்பொழுது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் நபர்களை இந்திய அணி தேர்வு செய்யும். அப்படி பலரும் அறியாமல் இந்திய அணிக்கு விளையாடிய 5 வீரர்களை குறித்து இங்கு பார்ப்போம்.

ஃபைஸ் ஃபைசல் – ஒரு ஒருநாள் போட்டி

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் ஃபைசல். பல்வேறு உள்ளூர் போட்டிகளில் சதங்கள் மற்றும் அரை சதங்கள் என அடித்து அசத்தி கொண்டிருப்பவர் இவர். ஆனாலும் இவர் இதுவரை ஒரே ஒரு சர்வதேசப் போட்டி மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி ஆடியது. அதில் சீனியர் வீரர்கள் எல்லாம் ஓய்வில் இருக்க இரண்டாம் நிலை அணியை இந்திய அணி விளையாட அனுப்பியது. இதே தொடரில் தான் தற்போதைய இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் சஹால் போன்றவர்கள் இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர்கள் போட்டிகளில் அறிமுகமாயினர். இந்தத் தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடிய பைஸல் அரைசதம் கடந்தார். இந்த ஒரு ஆட்டத்தைக் கடந்து இவரால் இன்றுவரை இந்திய அணிக்கு விளையாட முடியாதது சோகமான விஷயம்.

- Advertisement -

குர்கீரத் சிங் – மூன்று ஒருநாள் போட்டிகள்

உள்ளூர் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங். கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அப்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினையை சமாளிப்பதற்காக இவரை இந்திய அணியில் விளையாட வைத்தனர். மூன்று ஆட்டங்களில் இந்திய அணிக்கு விளையாடினாலும் பெரிதாக பேர் சொல்லும் அளவுக்கு அவரிடம் இருந்து எந்த ஒரு ஆட்டமும் வரவில்லை.

வி ஆர் வி சிங் – இரண்டு ஒரு நாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள்

உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் போது மிகவும் பிரபலமான பெயர் வி ஆர் வி சிங். வேகப்பந்து வீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர். இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு சந்திகர் அணிக்கு பயிற்சியாளராக சிறிது காலம் செயல்பட்டார்.

லட்சுமி ரத்தன் சுக்லா – 3 ஒரு நாள் போட்டிகள்

ஐபிஎல் தொடரின் மற்றொரு பிரபலமான பெயர் சுக்லா. ஆல்ரவுண்டர் ஆனா இவர் பல்வேறு போட்டிகளில் அணிக்கு தனது ஆல்ரவுண்டர் திறமை மூலம் வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடர் எல்லாம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே இந்திய அணிக்காக இவர் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் இவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தமும் 18 ரன்கள் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதனால் மீண்டும் இவரால் இந்திய அணிக்கு விளையாட முடியவில்லை.

- Advertisement -

ஸ்ரீநாத் அரவிந்த் – 1 டி20

ஐபிஎல் தொடரை அதிக காலம் பின்பற்றி ஒருவர் உங்களுக்கு ஸ்ரீநாத் அரவிந்தின் பெயர் நன்கு தெரிந்திருக்கும். பெங்களூர் அணிக்காக பல முக்கிய போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் இவரால் இந்திய அணிக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாட முடிந்தது. தர்மசாலாவில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் விளையாடினார் இவர் அதன்பிறகு இவரால் இந்திய அணிக்கு விளையாட முடியவில்லை